புதிய கல்வி கொள்கை இந்தியாவில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தும்

“பண்டிகை காலம் களைகட்ட தொடங்கி யுள்ளதால் மக்கள் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். அதிக எச்சரிக்கையுடன் இந்த பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, அரபு நாடுகளில் ஓணம்பண்டிகை கொண்டாடபடுகிறது. நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட தானியங்கள் இந்தாண்டு அதிகபரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே பொம்மைகள் செய்யும்மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது. விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக் கொள்கையில் ஒருபாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம்முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை கணினிமயமாக்குவது சிறப்பாக இருக்கும். நமது பழங்கால விளையாட்டு முறைகளை புதியடிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும்

புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. கரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும்சவாலானப் பணிகளை சிறபபாக மேற்கொள்கின்றனர். கரோனா காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பெரும்மாற்றத்தை உருவாக்கியுள்ளனர். வெளியில் தெரியாத சுதந்திரபோராட்ட வீரர்கள் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்.

ராஜபாளையம், சிப்பிப்பாறை போன்ற இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்கள் சிறப்பாக பணியாற்றக்கூடியவை. இந்திய இனத்தைச் சேர்ந்த நாய்களை வீடுகளில் வளர்க்க வேண்டும். தமிழக இளைஞர்களால் புதிய செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. சிறு வேலைகளில் ஈடுபடுபவர்கள் இதன்மூலம் பெரியளவில் முன்னேற்றம் காணமுடியும்.”.

செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்ட சத்துத்தொடர்பான விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. ஊட்டச் சத்து தொடர்பாக போட்டிகள் நடத்தப்படவுள்ளதால் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

நம் நாட்டின் குழந்தைகள், மாணவர்கள், தங்களுடைய முழுமையான ஆற்றலையும் வல்லமையையும் வெளிப்படுத்த மிகப்பெரிய ஒரு பங்களிப்பு அளிக்கக்கூடியது என்றால் அது ஊட்டச்சத்துதான். நாடு முழுவதிலும் செப்டெம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடிக்கப்படும். நாட்டுக்கும் ஊட்டச் சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டிலே ஒருவழக்கு உண்டு – உணவு எப்படியோ, உள்ளமும் அப்படியே. அதாவது நாம் உண்ணும் உணவைப் பொறுத்தே நமது மனோ-புத்தியின் வளர்ச்சி இருக்கும் என்பதே இதன் உட்பொருள்.

சிசு கர்ப்பத்தில் இருக்கும்போதும், அதன் குழந்தைப் பருவத்திலும், எத்தனை சிறப்பாக ஊட்டச்சத்து அதற்கு கிடைக்கிறதோ, அத்தனை சிறப்பானவகையில் அதன் மனவளர்ச்சி ஏற்படும், அது ஆரோக்கியமான இருக்கும்.
குழந்தைகளுக்கு ஊட்டம்நிறை உணவுகிடைப்பது அவசியமானது என்பதால், தாய்க்கும் சிறப்பான ஊட்டச்சத்து நிரம்பிய உணவு கிடைக்கவேண்டும். நீங்கள் என்ன உண்கிறீர்கள், எந்த அளவுக்கு உண்கிறீர்கள், எத்தனை முறை உண்கிறீர்கள் என்பது எல்லாம் ஊட்டச் சத்துக்கான விளக்கமல்ல.

உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கூறுகள் எந்தளவுக் கிடைக்கின்றன என்பதுதான் முக்கியமானது. உங்களுக்கு இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, உப்புச்சத்து கிடைக்கிறதோ இல்லையோ, விட்டமின்கள் கிடைக்கிறதோ இல்லையோ என்பதுஅல்ல; இவை அனைத்துமே ஊட்டச்சத்தின் முக்கியமான அம்சங்கள். ஊட்டச்சத்துக்கான இந்தஇயக்கத்தில் மக்கள் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று. மக்கள் பங்களிப்பு தான் இதை வெற்றி பெறச்செய்ய இயலும்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த திசையில் கணிசமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமதுகிராமங்களில், மக்கள் பங்களிப்பு வாயிலாக இது ஒருமக்கள் இயக்கமாகவே மாறிவருகிறது. ஊட்டச்சத்து வாரமாகட்டும், ஊட்டச்சத்து மாதமாகட்டும், இவற்றின் வாயிலாக மேலும் மேலும் அதிக விழிப்புணர்வு உருவாக்கபட்டு வருகிறது. பள்ளிகள் இதோடு இணைக்கப்படுகின்றன, குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப் படுகின்றன, இவற்றால் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்பதன் பொருட்டு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டாக வகுப்பில் ஒரு class monitor, வகுப்புத்தலைவன் இருப்பதைப் போல, ஊட்டச்சத்துக் கண்காணிப்பு இருக்க வேண்டும், அறிக்கை அட்டையைப்போல ஊட்டச்சத்து அட்டை தயார் செய்யப்பட வேண்டும், இந்த மாதிரியான ஒருவழிமுறை தொடங்கப்பட இருக்கிறது. ஊட்டச்சத்து மாதத்தில் MyGov தளத்தில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய வினாவிடை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது, இதோடு கூடவே ஒருமீம் போட்டியும் நடைபெறும். நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களையும் இதில் பங்கெடுக்க ஊக்கப்படுத்துங்கள்.

குஜராத்தில் அமைந்திருக்கும் சர்தார் வல்லப்பாய்படேல் அவர்களின் ஒற்றுமைச் சிலையைக் காணும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கலாம்; அல்லது கோவிட் கடந்துசென்ற பிறகு அது பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படும்போது அதைக் காணும் சந்தர்ப்பம் அமையலாம். அங்கே தனித்தன்மை வாய்ந்த ஒரு ஊட்டச்சத்து பூங்கா உருவாக்க பட்டிருக்கிறது. விளையாட்டாகவே ஊட்டச்சத்துபற்றிய கல்வியை, கேளிக்கையினூடே அங்கே நம்மால் கண்டறிந்துகொள்ள முடியும்.

பாரதம் ஒருபரந்துபட்ட தேசம், இங்கே பலவகையான உணவுப் பழக்கங்கள் உண்டு. நமது நாட்டில் ஆறுவகையான பருவகாலங்கள் உண்டு, ஒவ்வொரு இடத்திலும் அங்கு நிலவும் பருவநிலைக்கு ஏற்ப பல வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகையால் மகத்துவமான விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு இடத்திலும் பருவநிலை, அங்கே இருக்கும் வட்டாரஉணவு, அங்கே விளையும் உணவுப் பொருட்களுக்கு ஏற்ப, செரிவான ஊட்டச்சத்து நிரம்பிய உணவுமுறை உருவாக்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சிறு தானிய வகைகளில் ராகி, கேழ்வரகு ஆகியன பயனுள்ள ஊட்டச் சத்து உணவு. ஒருஇந்திய விவசாய சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு வருகிறது; இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிர் செய்யப் படுபவை பற்றியும், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்புபற்றியும் முழுமையான தகவல்கள் இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பாக இருக்கும். இந்த ஊட்டச்சத்து மாதத்தில் ஊட்டம் நிறைந்த உணவு மற்றும் உடல்நலம் பற்றியும் நாம் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் வாருங்கள்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...