சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்து

நேற்று, பா.ஜ., தேசியசெய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:’ஜம்மு — காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டதை, சீனாவின் உதவியுடன் மீட்போம்’ என, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள்முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக்அப்துல்லா, ‘டிவி’ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன்வாயிலாக, அவர் சீனாவின் ஆதரவாளராக உருவெடுத்துள்ளார். மேலும், கிழக்குலடாக் எல்லையில், சீனாவின் அத்துமீறலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஜம்மு — காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய, எம்பி.,யுமாக இருக்கும் ஒருவர், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகபேசுவது வேதனை அளிக்கிறது. ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமை, எதிர்க் கட்சியினருக்கு உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி மீது இருக்கும் வெறுப்புணர்வால், சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்தை, ஒரு எம்.பி., தெரிவிப்பது முறையல்ல.

வேடிக்கைவரலாற்றை புரட்டி பார்த்தால், இது போன்ற கருத்துக்களை, ராகுலும் அவ்வப்போது கூறிவருகிறார். இருவரும், ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.பாலகோட் தாக்குதலை கேள்விக்கு உட்படுத்தியபோது, பாகிஸ்தானில் ராகுல், ‘ஹீரோ’வாக பார்க்கப்பட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.எல்லையில், சீன ஆக்கிரமிப்புக்கு, காங்., தலைவர்கள் ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவின் அத்துமீறலை, காங்., எப்போதும் வேடிக்கை பார்ப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளது.

காங்கிரஸ்  துாண்டிவிடுவதன் காரணமாகவே, பரூக் அப்துல்லா, இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை பேசிவருகிறார்; இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது என்று , அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...