கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை ஒமர் அப்துல்லா பாராட்டு

ஒரு பிரிவினரின் மத உணர்வுகளைப் புண் படுத்தியதாக ஜம்மு-காஷ்மீரின் மூத்த பாஜகதலைவர் விக்ரம் ரந்தாவா மீது வழக்குப் பதிவு செய்ய பட்டுள்ளது.

துபையில் அண்மையில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதை சிலர் கொண்டாடியபோது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக மூத்த பாஜக தலைவரும் முன்னாள் எம்எல்சி.,யுமான விக்ரம் ரந்தாவா சிலகருத்துகளை வெளியிட்டார். அவை காணொலியாக இணையதளத்தில் பரவியதையடுத்து, பலர் அவரது பேச்சை கண்டித்தனர்.

அதையடுத்து, விக்ரம் ரந்தா வாவிடம் விளக்கம்கேட்டு ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக்குழுத் தலைவர் சுனில்சேத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்தநோட்டீஸில், “ஒருகுறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக நீங்கள் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் கருத்துகளை வெளியிட்டிருப்பதை கட்சியால் ஏற்கமுடியாது. அது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகும். இதற்காக 48 மணி நேரத்துக்குள் தாங்கள் விளக்கம் அளிப்பதுடன், மன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேச பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், “விக்ரம் ரந்தாவாவின் கருத்துகளை கேட்டதும் தனிப்பட்டமுறையில் எனது மனம் காயமடைந்தது. பிரதமர் நரேந்திர மோடியின் “அனைவருக்குமான வளர்ச்சி’ என்ற லட்சியத்துக்கும் பாஜகவின் அடிப்படை கொள்கைகளுக்கும் இவைமுற்றிலும் எதிரானவை’ என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர்கூறுகையில், “விக்ரம் ரந்தாவா மீது, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், மத உணர்வுகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடும் வகையில் பேசுவது (பிரிவு 295-ஏ), வகுப்புவாத வெறுப்பை தூண்டும்வகையில் அறிக்கை வெளியிடுவது (பிரிவு 505 -2) ஆகிய பிரிவுகளில் ஜம்மு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக தனது கட்சித்தலைவர் மீதே பாஜக தலைமை நடவடிக்கை எடுத்திருப்பதை தேசியமாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர்அப்துல்லா பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கையை மற்றவர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...