உபி மாநிலம் அயோத்தியில், ஒவ்வொருஆண்டும் தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளன்று ராமாயணத்தின்படி ராமபிரான் வனவாசம் முடிந்து நாடுதிரும்பிய நிகழ்வை கொண்டாடும் விதமாக தீபஉற்சவம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அயோத்திநகரமே விழாக்கோலம் பூண்டுவிடும்.
ஆனால் இந்தஆண்டு கொரோனா அச்சத்தால், தீபஉற்சவம் வழக்கமான ஆரவாரத்துடன் நடைபெறுமா? என்ற சந்தேகம் காணப்பட்டது. எனினும் எந்தவித தடங்கலும் இன்றி தீபஉற்சவம் நேற்று முன்தினம் அயோத்தியில் களைகட்டியது.
சரயுநதிக்கரை நெடுகிலும் மக்கள் லட்சக்கணக்கான தீபங்களை ஏற்றி ராமபிரானை வழிபட்டனர். மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 569 விளக்குகள் ஏற்றப்பட்டன. இது ராமபிரானின் பக்தர்களுக்கும், சுற்றுலா வாசிகளுக்கும் மிகுந்த களிப்பூட்டியது.
முன்னெப்போதும் இல்லா வகையில் அதிக எண்ணிக்கையில் ஏற்றப்பட்ட இந்த தீபஉற்சவ நிகழ்ச்சி, ஏற்கனவே படைக்கப்பட்டிருந்த கின்னஸ் சாதனையையும் முறியடித்து புதிய சாதனையைபடைத்தது. இதைத்தவிர கொரோனா அச்சத்தால் மெய்நிகர் முறையில் மக்கள் 10 லட்சத்துக்கும் மேலான விளக்குகளை ஏற்றிவழிபட்டனர். இதற்காக இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருந்தது.
மொத்தத்தில் அயோத்தி நகரம் முழுவதையும் பரவசத்தில் ஆழ்த்திய இந்த தீபஉற்சவ நிகழ்ச்சி மிகப்பெரும் வெற்றி பெற்றிருப்பதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார். அடுத்தஆண்டு இந்த சாதனையும் முறியடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |