பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த அநீதியும் இழைக்கப் படாது என்று மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 20வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி வருமாறு:மகாராஷ்டிராவில் விதர்பா பிராந்தியத்தில் ஏழைவிவசாயிகள் 10 ஆயிரம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள். நான் அந்த பகுதியைச் சேர்ந்தவன். எனக்கு விவசாயிகளின் நிலைமைதெரியும். டெல்லியில் தற்போது போராடும் விவசாயிகளுடன் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயலும், வேளாண் அமைச்சர் தோமரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகள் எழுப்பும் பிரச்சனைகள் நியாயமானவை. அவைகுறித்து விவாதிக்க வேண்டும். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், அது தவறான தகவல்களைக் கொண்டுபோய் சேர்க்கும். தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளோம். புதிய வேளாண் சட்டங்களை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக அரசு விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. அவர்களின் பரிந்துரைகளை ஏற்க தயாராக உள்ளது . பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்தஅநீதியும் இழைக்கப்படாது. அன்னா ஹசாரே அந்தபோராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்றே கருதுகிறேன். இவ்வாறு நிதின்கட்கரி கூறியுள்ளார்..
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |