விவசாய போராட்டமும் பின்னணியும்

விவசாய சட்டங்களை கொஞ்ச காலம் ஒத்தி வைப்போம் என மத்திய அரசு சொல்லிவிட்டது என பலருக்கு வருத்தமாக இருக்கிறது. அதேநேரத்திலே கம்மினாட்டிஸ்ட் பத்திரிக்கைகளோ ஆர் எஸ் எஸ் தான் இப்படி முடிவு எடுக்க வைத்தது என கொண்டாட்டமாக இருக்கிறதுகள். அதுகளுக்கு ஆர் எஸ் எஸ் பத்தி ஏதும் தெரியாது என்பது வேறுவிஷயம்.

ஏன் அரசு கொண்டுவந்த திட்டங்களை ஒத்திப்போடவேண்டும் என சொல்லவேண்டும்? இது கொஞ்சம் சிக்கலான பிரச்சினை. காஷ்மீரைப்போல பஞ்சாப் முழுக்கமுழுக்க மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை நம்பியே காலம் தள்ளுகிறது. ஒருகாலத்திலே லூதியானா போன்ற இடங்கள் தொழில் நகரங்களாக இருந்தன ஆனால் அதெல்லாம் திட்டமிட்டே அழிக்கப்பட்டன.இப்போது பஞ்சாப் விவசாயிகளை அதுவும் மேல்தட்டு ஜாட்சீக்கிய விவசாயிகளுக்கு மத்திய அரசின் நெல்/கோதுமை கொள்முதல்தான் ஆதாரமே.

இந்த ஜாட் விவசாயிகளுடன் ஹரியானா ஜாட் மேல்தட்டு விவசாயிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஜாட்சாதியை தூண்டிவிட்டு 2016 இல் ஜாட்களுக்கு இட ஒதுக்கீடு என பெரும்கலவரம் செய்தார்களே ஞாபகம் இருக்கிறதா? அதே போல் திரும்பவும் கலவரத்தை உருவாக்க திட்டம்.

அதென்னாங்க போலீஸை வைத்து ஒடுக்கி விட முடியாதான்னா முடியும் அது கிளையை மட்டும் வெட்டுதல் வேரும்மரமும் அப்படியேதான் இருக்கும்.
இதுக்கு நீண்டகால தீர்வுவேண்டும். சும்மா காவல்துறை நடவடிக்கை ஆள் வைத்து அடித்தல் எல்லாம் சரியாகாது எவ்வளவுபேரை அடிப்பது? சீக்கியர்களை இந்தியா ஒடுக்குகிறது என பரப்புரைசெய்ய நீண்டகாலமாக பொரிக்கிஸ்தான்

தீவிரவாதிகளும் நமது நாடுவளர்வதை பிடிக்காத கனடா, இங்கிலாந்திலே இருக்கும் இனவெறிய மிருகங்களும் காத்திருக்கின்றன.அந்த போராட்டத்திலே இருக்கும் சீக்கியர்களை பொய்சொல்லி அழைத்து வந்திருக்கீறார்கள் என்றே இருக்கட்டும் பணம் கொடுத்து கூட்டி வந்திருக்கிறார்கள் என்றே இருக்கட்டும். இறங்கி அடித்தால் உடனே ஐயோ அடித்துவிட்டான் என ஒப்பாரி வைப்பார்கள்.

இந்த தீவிரவாத அமைப்புகள் 2020 ஓட்டெடுப்பு என்ற ஒன்றை நடத்த திட்டமிட்டு பெரும் முயற்சிகள் செய்வதாக அறிவித்தன. அதாவது நமது நாட்டிலே இருந்து பஞ்சாப்மாநிலம் பிரியவேண்டுமா வேண்டாமா என ஓட்டெடுப்பு நடத்துவார்களாம். எப்படி கதை?

அதுக்கு ஒருமுக்கல் முனகல் ஆதரவுகூட இல்லை என்பதால் அந்த ஆதரவை வரவைக்க நமது தேசத்தின்மீது வெறுப்பை விளைவிக்க இப்படி ஒரு விஷயத்தை செய்யவேண்டும் என நினைத்திருந்தார்கள். இந்த விவசாய சட்டம் எல்லாம் ஒருசாக்குதான்.யோசித்துப்பாருங்கள் இங்கே டெல்லிக்கு விவசாயிகள் பேரணி என்றவுடனே கனடா பிரதமர் அறிக்கை விடுகிறார், கனடா எம்பிக்கள் கடிதாசி போடுகிறார்கள், இங்கிலாந்து எம்பி உடனே அவர்கள் சட்டமன்றத்திலே கேள்வி கேட்கிறார்,

பல எம்பிக்கள் கடிதாசி போடுகிறார்கள். அந்த மனித உரிமை அமைப்பு இந்தமனித உரிமை அமைப்பு எல்லாம் அறிக்கை விடுகிறது, அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதாசி போடுகிறார்கள்.கனடாவிலே பேரணி, அமெரிக்காவிலே பேரணி, இங்கிலாந்திலே போராட்டம் என எப்படி எல்லாம் சொல்லிவைத்தது போல் நடைபெறுகிறது?.

உடனே இது சர்வதேச சதி கிதி என்றெல்லாம் பேசவரவில்லை.இதிலே பல விஷயங்கள் பின்னி பிணைந்து உருள்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு பக்கம் அரசின் பணத்தையே நம்பி அரசுக்கே நெல்லை/கோதுமையை விற்று இவ்வளவுகாலமாக வாழ்ந்து வரும் விவசாயிகள். இவர்களிடத்தே பொய்பரப்புரை செய்யப்பட்டுள்ளது.

இன்னோர் பக்கம் சீக்கியர்களுக்கு பெரியமதிப்பு கிடைக்கவில்லை எனவே கெத்து காட்டுகிறோம் பார் என இருக்கும் சில பல சீக்கிய குரூப்புகள் இன்னோர் பக்கம் கான்கிரஸ் மற்றும் சிரோன்மணி அகாலி தளத்தின் ஊழல் வியாபாரங்கள். மத்திய அரசு வாங்கும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் திரும்பவும் இவர்கள் கைக்கே போகிறது அது நிறுத்தப்பட்டால் இவர்களின் கட்சியே கலகலத்து போகும். எனவே இதை தூண்டி விடுகிறார்கள்.

இன்னோர் பக்கம் தனிநாடு வேண்டும் என இருக்கும் அடிப்படைவாத சீக்கிய அமைப்புகள். அதை தூண்டிவிடும் பொரிக்கிஸ்தான்.இன்னோர் வெளிநாடு வாழ் சீக்கியர்களை கொண்டு நம் நாட்டின் முன்னேற்றத்தை தடுத்துநிறுத்த முயற்சி செய்யும் அமைப்புகள்.இது எல்லாவற்றீக்கும் இணைப்பாய் விவசாயி என்ற பெயரிலே இருக்கும் கம்மினிஸ்ட்  அமைப்புகளும்.

எனவே இதை விட்டுத்தான் பிடிக்கவேண்டும்.கொஞ்சம்கொஞ்சமாக அவர்களே அலுத்து சலுத்துப்போய் விடும்படி செய்தால் ஒழிய பஞ்சாப் இன்னோர் போர்க்களமாக மாறும் அபாயமே உண்டு.எனவே மோடிக்கு அரசாங்கம் தெரியவில்லை, அரசியல் தெரியவில்லை என அறிவுரைகளை அள்ளித் தெளிக்கும் முன்னர் இது என்ன சிக்கல் அதை எப்படி கையாண்டு கொண்டிருக்கிறார் என புரிந்து கொள்ளவேண்டும்.

பணம்வரும் வழிகள் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டு இருக்கின்றன. சாம தான பேத வழிகள் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.ஆனாப்பட்ட 370 சட்டத்தையே இப்படிக்கா லெப்ட்ல டீல் பண்ணிவருக்கு இதெல்லாம் தெரியாது என சொல்லவேண்டாம். அதற்கானவேலைகள் தானாக நடந்து கொண்டிருக்கின்றன.
பலமுறை சொன்னது தான்.

மோடியின் நிர்வாகத்திலே எல்லாமே அது பாட்டுக்கு தானாக நடக்கும். இப்போ இந்த போராட்டம் நடக்குதுன்னு கோவிட் தடுப்பூசி நின்னுச்சா? இந்த போராட்டம் நடக்குதுன்னு ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவது நின்னுச்சா?
இந்த போராட்டம் நடக்குதுன்னு தேர்தல்வேலைகள் நின்னதா?
இல்லையில்ல? அதே போலத்தான் போராட்டத்தை அடக்குதலும்.அதெல்லாம் அது பாட்டுக்கு நடக்கும்

நன்றி: ராஜசங்கர் விஸ்வநாதன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...