பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம்

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் (79) அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. அதன்பின் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். இதையடுத்து அமரீந்தர் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமரீந்தர் சிங் பாஜகவில் சேர்வார் என தகவல்வெளியானது. இதை அவர் மறுத்தார். இந்த சூழ்நிலையில் அமரீந்தர் சிங் சார்பில் அவரது ஊடகஆலோசகர் ரவீன் துக்ரல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பஞ்சாபின் எதிர்காலத்துக்கான போர்தொடங்குகிறது. பஞ்சாப் மற்றும் வாழ்வாதாரத்துக்காக சுமார் ஓராண்டாக போராடி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களின் நலனுக்காக சேவை செய்வதற்கு புதிய அரசியல்கட்சியை தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.

விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு தீர்வுகண்டால், வரும் பஞ்சாப் பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். மேலும் அகாலி குழுக்கள் குறிப்பாக திண்ட்சா மற்றும் பிரம்மபுராபிரிவினர் உள்ளிட்ட ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...