சசிதரூர், ராஜ்தீப்சர் தேசாய் உள்ளிட்ட பலர் மீது தேச துரோக வழக்கு

காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப்சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக பிரிவு, சதிசெய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தியபேரணி வன்முறை வெடித்தது. அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார்சுட்டதில் விவசாயி உயிரிழந்ததாக  தவறாக வெளியான தகவலை, சசிதரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவுசெய்தனர்.

ஆனால், டிராக்டர் பேரணியின்போது டில்லி போலீசார் ஒருதுப்பாக்கி குண்டைகூட சுடவில்லை. விவசாயி டிராக்டர் கவிழ்ந்தே உயிரிழந்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கமளித்து, அதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டனர். அந்த வீடியோவில், விவசாயிகள் சென்ற டிராக்டர் போலீசாரின் தடுப்பில் மோதிகவிழ்ந்தது. இதில், விவசாயி உயிரிழந்த காட்சிகள் பதிவாகியது. உயிரிழந்த விவசாயி பிரேத பரிசோதனையின் போதும், உடலில் எந்த வித துப்பாக்கி குண்டு காயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த அர்பித்மிஸ்ரா என்பவர், நொய்டா போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில் ‛‛ குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் போராட்டக்காரர் ஒருவர் மரணம்தொடர்பாக தவறான செய்தியை டுவீட்செய்த சசிதரூர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சசிதரூர், ராஜ்தீப்சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது, ஐபிசி சட்டப்பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, 29, 504, 505(2). 124ஏ(தேச துரோகவழக்கு) 34, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66வது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகள் ஆகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...