புதுவை கவர்னர்மாளிகை விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு இடமுன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் உலகளவில் ஆளுமையிலும், மக்கள் சேவையிலும் சிறந்துவிளங்கும் முன்னணி பெண் தலைவர்களை தேர்ந்தெடுத்து வருகிற 7-ந்தேதி சிகாகோ இலியானாஸ் நகரில் நடைபெறும் 9-வது ஆண்டு மகளிர் தினவிழாவில் அமெரிக்க எம்.பி. டேனி கே.டேவிஸ் காணொலிகாட்சி மூலம் விருதுகளை வழங்குகிறார்.
இவ்விழாவில் இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா, ரஷியா போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனாவுக்குபின் வருங்கால உலக சீரமைப்பில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் இந்த வருடம் விருது வழங்கப்பட இருக்கின்றது. முதல்விருது அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்-க்கும், 2-வது விருது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் வழங்க உள்ளனர்.
மேலும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மொத்தம் 20 பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |