பாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது

பாஜக தான் தமிழ்கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது என, பாஜக தமிழகமேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக சார்பில் இன்று (மார்ச் 05) தேர்தல்பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமையில் உதகை சேரிங்கிராஸ் முதல் ஏடிசி வரை ஊர்வலம் நடைபெற்றது. ஏடிசி பகுதியில் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், உதகை ஒய்.பி.ஏ., மண்டபத்தில் பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

இதையடுத்து, சி.டி.ரவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“தமிழகம் முழுவதும் நாங்கள் வெற்றிக்கொடி யாத்திரைசெல்கிறோம். அனைத்து இடங்களிலும் பாஜகவுக்கு வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணிகட்சிகள் வெற்றிபெறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதிமுகவுடன் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிருநாட்களில் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்படும்.

பாஜக தான் தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது. அதிமுக ஜனநாயகம் கொண்டகட்சி. திமுகவில் ஜனநாயகம் இல்லை. குடும்ப அரசியலை செய்துவருகின்றனர்.

ஜல்லிக்கட்டை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தடைசெய்தன. பாஜக தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தவும் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்தது.

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த சுயசார்புபாரதம் திட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ராகுல்காந்தி வாக்காளர்களை கவர கோமாளி அரசியல்செய்து வருகிறார். அவருடைய அரசியல் எடுபடாது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...