மதுரையில் பாஜகவினரைத் தாக்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம்முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சித் தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைஅணிவிக்க பாஜகவினர் வந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்புதெரிவித்தனர். அப்போது நடந்த மோதலில் பாஜகவினர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தடைசெய்ய வலியுறுத்தியும், பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள்கட்சியினரின் வன்முறைக்கு பாஜகவினர் அஞ்சமாட்டார்கள்.
திருமாவளவன் வன்முறையைத் தூண்டிவிட்டு, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றுள்ளார். இதனை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்கவேண்டும். இல்லாவிட்டால் பாஜக வேடிக்கை பார்க்காது.
பாஜகவினரைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக பொதுச் செயலர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:
மதுரையில் போலீஸார் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். பாஜகவினர், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜ கவினருக்கு எதிரான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
1partaken