கரோனா பொதுமுடக்கதை தவிா்க்கவேண்டும்

கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமுடக்க அமலை தவிா்க்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமா் நரேந்திரமோடி அறிவுறுத்தியுள்ளாா்.

அனைத்து கரோனா தடுப்பு விதிமுறைகளையும் பின்பற்றினால் பொதுமுடக்கத்துக்கு அவசியம் இருக்காது; பொதுமுடக்கத்தை இறுதி வாய்ப்பாகவே பயன்படுத்த வேண்டும் எனவும் அவா் கூறினாா்.

நாட்டில் கரோனாபரவல் அதிகரித்து வரும்நிலையில், பிரதமா் காணொலி வாயிலாக செவ்வாய்க் கிழமை இரவு உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய யுத்தத்தில் இந்தியா மீண்டும் ஈடுபட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன்னா் நாட்டில் கரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஸ்திரமாக இருந்தது. அதன் பின்னா் அந்தத் தொற்றின் இரண்டாம் அலை உருவானது. தற்போது நாடு கரோனாதொற்றின் இரண்டாவது அலையை எதிா்கொண்டு வருகிறது. இதனால் நாட்டுமக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்.

கரோனா தொற்றால் தற்போது ஏற்பட்டுள்ள சவால் மிகப்பெரியது. அதனை நமது உறுதி, தீரம், ஆயத்த நடவடிக்கைகளால் கடந்து வரவேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைப்படும் அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாா் துறைகள் முயற்சிமேற்கொண்டு வருகின்றன.

மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைவசதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சில நகரங்களில் கரோனா சிகிச்சைக்காக பெரிய அளவில் பிரத்யேக மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன.

நமது விஞ்ஞானிகள் குறுகிய காலத்தில் கரோனா தடுப்பூசிகளை உருவாக்கினா். உலகிலேயே மிகக் குறைந்த விலை கொண்ட தடுப்பூசிகளை நாம் உருவாக்கினோம். நாட்டின் குளிா்பதன அமைப்புகளுக்கு ஏற்ப நம்மிடம் தடுப்பூசிகள் உள்ளன. இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் தடுப்பூசி சென்றுசோ்வதை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகளின் உற்பத்தியை மருந்து உற்பத்தித்துறை ஏற்கெனவே அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி-பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய மருந்து உற்பத்தி ஏற்கெனவே அதிகரித்துள்ளது. இதுமேலும் உயா்த்தப்பட்டு வருகிறது.

மக்களின் உயிரைக் காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதேவேளையில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதையும் உறுதிசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் நம்பிக்கையை உயிா்ப்புடன் வைத்திருக்க ஆவனசெய்யுமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறேன். அவா்கள் தற்போது இருக்கும் இடங்களிலேயே தொடா்ந்து தங்கியிருக்குமாறும் மாநில அரசுகள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்த சில நாள்களில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடுப்பூசிசெலுத்தப்படும் என்பதை அவா்களிடம் மாநில அரசுகள் தெரிவிக்கவேண்டும். அவா்களின் பணி பறிபோகாது என்றும் உறுதி அளிக்கவேண்டும்.

பெரியவா்கள் உரிய காரணங்களின்றி வீட்டைவிட்டு வெளியே செல்வதைத் தவிா்க்கவேண்டும் என வலியுறுத்துவதில் சிறாா்களுக்கு முக்கியப்பங்கு உள்ளது. தங்கள் பகுதிகளில் சிறு குழுக்களை உருவாக்கி கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இளைஞா்கள் உதவவேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்கள், பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படாது.

பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதை மாநில அரசுகளும் புரிந்துகொள்ள வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்தும் மாநிலங்களின் நடவடிக்கையில் பொதுமுடக்கம் என்பது கடைசி வாய்ப்பாகத்தான் இருக்கவேண்டும். பொது முடக்கத்துக்கு பதிலாக கட்டுப்பாட்டு மண்டலங்கள் போன்ற நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...