மத்திய அரசின் மேக் இன் இந்தியா (Make in India) திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திரமோடியின் (PM Narendra Modi) தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கிலான தற்சார்பு இந்தியாதிட்டத்தின் பலனாக, பிரபல் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் (Samsung) உத்தர பிரதேசத்தில் (உ.பி.) மொபைல்கள் மற்றும் டேப்களுக்கான டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் உற்பத்திபிரிவை, சீனாவிலிருந்து (China) இந்தியாவுக்கு மாற்றியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியாபிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கென்காங் தலைமையிலான நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 20) உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபேசியது. அதன் பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தொழில் துறையினருக்கான உகந்த சூழல் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் கொள்கைகள் காரணமாக, சீனாவில் (China) அமைந்துள்ள டிஸ்ப்ளே உற்பத்திபிரிவை உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நிறுவ சாம்சங் முடிவு செய்தததாக கூறப்பட்டுள்ளது.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |