ஸ்தாபன தினத்தில் உறுதிமொழி ஏற்போம்

இந்திய நாட்டில் நிலையற்ற தன்மை நிலவியபோது, ஒரு மிகப் பெரிய கேள்விக் குறியோடு தொடங்கப்பட்ட ஒரு இயக்கம், இன்று மிகப் பெரிய ஆச்சரியக் குறியாக பலரது விழிப்புருவங்களை உயர்த்தும் வகையில் உள்நாட்டில் வெற்றிகளையும், வெளிநாட்டில் நன்மதிப்பையும் பெற்றுவருகிறது.
சியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாதக் கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கம் என்ற அமைப்பு நிறுவப்பட்டது. காங்கிரசை மிகக் கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், தேசஒற்றுமை மற்றும் நாட்டின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்தில் உறுதியாக விளங்கியது.

ஜம்மு–காஷ்மீரில் நுழைய தனி அனுமதி (விசா) என்ற சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் ஜனசங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். மிகக் குறு­கிய காலம் மட்டுமே தலைவராக இருந்தார். அவரது மர­ணத்தின் மர்­மமும் இன்னும் விடை காணப்­ப­ட­வில்­லை.

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல் மேதைகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். ஜன சங்கம் கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும், சுயக் கட்டுப்பாடும், கடமை உணர்வும் கொண்டவர்களாக விளங்கினர்.
தீனதயாள் உபாத்யாயாவால் 1965ஆம் ஆண்டு முன்வைக்கப் பட்ட “ஒருங்கிணைந்த மனித நேயம்” என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாக ஏற்றுக் கொண்டது ஜனசங்கம் கட்சி. பின்னாட்களில் அவர் முன் வைத்த அந்தத் தத்துவம் புத்தகமாக வெளியானது.

பாரதிய ஜனசங்கம் 1980 ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி அன்று புதுவடிவத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ற புதுப் பெயருடன் மறு பிறப்பெடுத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பாஜகவின் முதல் தலைவரானார். முன்பிருந்த ஜனசங்கங்கத்தின் காவிக் கொடி இப்போது காவியும், பச்சையும் கொண்ட கொடியாக மாறியது. தீபவிளக்கு சின்னம் தாமரை சின்னமாக மாறியது.
1984ல் பாரதிய ஜனதா கட்சி சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 2 இடங்களே கிடைத்தன. தொடர்ந்து நடைபெற்ற 1989ம் ஆண்டு நடந்ததேர்தலில் பாஜக 85 தொகுதிகளில் வென்றது. பின்னர் 1991ல் பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்தது.
1996ல் பாஜக மிகஅதிகபட்சமாக 187 தொகுதிகளைக் கைப்பற்றியது.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமர் ஆனார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாததால் அவர் 13 நாட்களே ஆட்சியில்இருந்தார். ஆனால் உடனே 1998ல் வாஜ்பாய் அவர்கள் மீண்டும் பிரதமரானார். இம்முறை அதிமுக ஆதரவை விலக்கிகொண்டதால் வெறும் 13 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 1999ல் பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. இம்முறை அடல் பிஹாரி வாஜ்பாய்அவர்கள் முழுமையான 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். ‘இந்து – சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்’ என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நடைபெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் 2014 மக்களவைத் தேர்தல். இந்தத்தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவிக்கப் பட்டார். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்று மத்தியில் திரு. நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்த­து. தொடர்ந்து 2019ல் முன்னிலும் அதிக இடங்­க­ளோடு வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்திய மாநிலங்களில் வெற்றிபெற வேண்டும் என்ப தற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர முயற்சி களை மேற்கொண்டது. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரசார் புதியவியூகங்கள் வகுத்து செயல்பட்டனர். எல்லா மாநிலங்களிலும் பாஜக.வுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை காங்கிரஸ்கட்சி உருவாக்கியது. ஆனாலும் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆளும்மாநிலங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளன.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் 19 மாநிலங்களில் 14 மாநிலங்களில் பா.ஜ.க. முதல்-மந்திரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். இந்த 14 மாநிலங்களில் 9 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி நடத்துகிறது. மேலும் கர்நாடகாவில் விரைவில் நடைபெற இருக்கும் சட்ட சபை தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக போராடும். மாநிலங்களவையிலும் இப்போது பாஜக தனக்கு தேவையான பெரும் பான்மையை பெறும் நிலையை எட்டிக் கொண்டிருப்பதால், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கிறது.

காங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல் படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா.ஜ.க கூறுகிறது.

அடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய மதசார்பின்மைக் கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். மகாத்மா காந்தியால் முன்மொழியப்பட்டக் கோட்பாடான சர்வ தர்ம சம்பவ என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா.ஜ.க.வின் கருத்து.

வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற ஆன்மீக அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையே மகாத்மாகாந்தியின் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கும் சர்வ தர்ம சம்பவ கோட்பாடாகும். இக்கோட்பாடு எந்த மதத்திற்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களையும் சமமானதாகவே பார்க்கிறது. எனவே, இக்கோட்பாடே இந்தியாவிற்கு உகந்தகொள்கையாகும் என்றும் இதுவே மேற்கத்தியக் கொள்கைகளைவிட சிறந்தது என்றும் பாஜக நம்புகிறது..

பா.ஜ.கவின் கொள்கைகளுள் “ஒருங்கிணைந்த மனிதநேயம்” என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப் பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாவது:

கட்சி, இந்தியாவை வளமான மற்றும் பலமான தேசமாக வளர்க்க உறுதி பூண்டுள்ளது. பண்டைய கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட நவீன மற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம். சாதி, சமய மற்றும் பாலின வேறுபாடின்றி ஒருஜனநாயக நாட்டை உருவாக்கி அதில் அனைவருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சமவாய்ப்பு, கருத்து மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் கிடைக்க இக்கட்சி பாடுபடும். இக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு அதன் கொள்கைகளான மதசார்பின்மை, நேர்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் உரிமைகளைக் காக்க தொடர்ந்து பாடுபடும் என்று பாரதிய ஜனதாகட்சி சொல்வதோடு இல்லமல் செயல் வடிவம் கொடுத்தும் வருகிறது.
பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின், நல்லாட்சிக்கு தந்த பரிசாக தமிழகத்திலும் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏகள் சட்டமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தாமரையின் மலர்ச்சி உறுதிசெய்யப்பட்டு விட்டது. இனி தாமரையின் வளர்ச்சி மற்றும் பாரத பிரதமரின் நல்லாட்சியை தமிழகத்திலும் நடத்திக் காட்ட வேண்டியது நம் கடமையாகும். இந்தஸ்தாபன தினத்தில் நாம் அதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்வோம்.

நன்றி அண்ணாமலை

பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...