மங்களூர் சராவு சரபேஸ்வரர் ஆலயம்

கர்னாடகா மானிலத்தில் புகழ் பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் பல உண்டு. முக்கியமாக மங்களூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் ஆச்சரியமான பின்னணிக் கதைகளைக் கொண்டுள்ளது. அப்படி அமைந்துள்ள ஒன்றே சராவு சரபேஸ்வரர் ஆலயம் . அந்த ஆலயம் முக்கியத்துவம் பெற்றதின் காரணம் , அங்கு சிவனும், வினாயகரும் தனித்தனியான

 

காரணத்தினால் எழும்பி உள்ளனர் . அங்கு வினாயகர் எழுந்ததின் காரணம் பற்றி ஒரு புராணக் கதை ஸ்கந்த புராணத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

 

அதன்படி ஒரு முறை வினாயகரும் , அவருடைய சகோதரரும் தேவலோகத்தில் அமர்ந்து பேசிக்கொணடு இருக்கையில் முருகப் பெருமான் வினாயகரிடம் தெற்குப் பகுதியில் நேத்தாவதி நதியும் பால் குனி நதியும் இணையும் இடத்தில் எழுந்தருளி பக்தர்களின் துயரைத் தீர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வினாயகரும் அதை ஏற்று பின்னர் ஒரு காலத்தில் சரபேஸ்வரர் ஆலயத்தில் இடதுபுறம் தன்மனைவியான சித்தலஷ்மிதேவி அமர்ந்திருக்க அங்கு எழுதருளினாராம் . வினாயகர் ஆலயம் அங்கு வந்ததைப் பற்றி கூறப்படும் கதை இரண்டு பிரிவானது. முதலில் வந்தது சிவபெருமான் ஆலயம். அடுத்து வந்ததே வினாயகர் ஆலயம் .

சரபேஸ்வரர் ஆலயம் எழுந்த கதை

பல நூற்றாண்டுகளுக்கு முன் துளு என்ற தேசத்தை வீரபாகு என்ற மன்னன் ஆண்டு வந்தான் . அந்த மன்னன் சிறந்த பக்திமான் , பெரும் அறிவாளி, பராக்கிரமம் மிகுந்தவர் . அவர் அடிக்கடி காட்டில் சென்று வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர் . அப்படி ஒரு நாள் ஒரு அடர்நத காட்டில் வேட்டையாடி விட்டு திரும்பியவர் கடாலி ஷேத்திரப் பகுதியை அடைந்தார் . அங்கு நேத்திராவதி மற்றும் பால்குனி நதிகள் ஓடிக் கொண்டு இருந்தன. அதன் அருகில் சிவாலயமும் , விஷ்ணுவின் ஆலயமும் இருந்தன. காட் டில் வேட்டையாடிவிட்டுத் திரும் பியவர் தன் குடும்பத் தினருடன் இளைப்பாறிய பின் குளித்துவிட்டு அங்கிருந் த சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டார் . திரும்பும் வழியில் அந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அடந்த காடு இருப்பதைக் கண்டார் . அங்கும் கொடியவிலங் குகள் இருக்கலாம் என நினைத்து உள்ளே சென்றார் .

அந்த காட்டில் பல ரிஷி முனிவர்களுடைய குடில்கள் இருந்தன. அவற்றை நோக்கிய வண்ணம் நடந்தவர் கண்ணில் ஒரு அற்புதமாக காட்சி தெரிந்தது. ஒரு இடத்தில் பசு நின்றிருந்து புல் மேய்ந்து கொண்டு இருக்க அதன் பக்கத்தில் ஒரு புலி சென்று நின்றது. 'ஐயோ, புலி அந்த பசு மாட்டைக் கொன்று விடுமே' என மன்னன் பதறினான் . சற்றும் தாமதிக்காமல் அந்த புலி மீது ஒரு அம்பை எய்தான் . அந்தோபரிதாபம் , அந்த அம்பு பசு மாட்டின் மீது பாய்ந்து அதைக் கொன்று விட்டது.

பசுவைக் கொன்று விட்டேனே எனத் துடித்து அங்கிருந்த முனிவர் ஒருவரின் குடிலுக்குச் சென்று அவரிடம் நடந்ததைக் கூறி அழுதான் . அவன் சந்தித்தது பாரத்வாஜ முனிவரைதான் . அவன் கூறிய அனைத்தையும் கேட்ட முனிவர் 'மன்னா நடந்தது நடந்துவிட்டது. இந்த புனிதமான இடத்தை பரசுராமர் தோற்றுவித்துள்ளார் . இல்லை எனில் பசுவும் , புலியும் ஒரு இடத்தில ஒன்றாக வாழ முடியுமா?. நீ பசுவைக் காப்பாற்றத்தான் அம்பு எய்தாய் . உன் எண்ணத்தில் தவறு இல்லை. ஆனால் உன்னையும் மீ றி நீ பாபத்தை பெற்றுக்கொண்டு விட்டாய். அதற்கு பிராயசித்தமாக உன்னால் முடிந்தால் நீ ஒரு சிவன் கோவிலை அந்த பசு மரணம் அடைந்த இடத்தில் எழுப்பி அங்கு தினமும் சென்று பூஜைகள் செய்து வந்தால் பாபம் படிப்படியாக குறைந்துவிடும்' என்றார்.

அந்த மன்னன் சற்றும் யோசிக் கவில்லை. தான் சிவன் ஆலயம் எழுப்புவதாக உறுதி கூற அந்த முனிவர் அவனிடம் கூறினார் , ' மன்னா ஆலயம் எழுப்பும் முன் அந்த இடத்தில்; ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையைத் துவக்கு. அவர் சரபேஸ்வர் எனப் பெயர் பெறுவார் . அதற்கு முன்; ஆலயம் கட்ட உள்ள இடத்தின் வடக்குப் புறத்தில் ஒரு குளத்தைக் கட்டி அதன் தெற்குப்புறம் ஒரு பசுமாட்டின் சிலையை அமைக்க வேண்டும் . என் தவ வலிமையினால் அந்த பசுவின் முகத்தில் இருந்து நேத்திராவலி நதியின் நீரை அதில் பாயச் செய்கின்றேன் . அந்த குளம் என்றும் வற்றாது. அந்த குளத்திற்கு சரபேஸ்வரர் குளம் எனப் பெயரிடு. ஆலயத்தைக் கட்டிய பின் ஒரு லட்சம் பண் டிதர்களுக்கு உணவு கொடுக்க வேண் டும் . காலப் போக்கில் அந்த ஆலயமும் காசி விஸ்வநாதராக போற்றப்பட, குளத்து நீர் கங்கை நதி என பெருமைப் பெறும் . அது மட்டும் அல்ல ஆலயத்தி ன் தெற்குப்புறம் வினாயகப் பெருமான் தாமாகத் தோன்றி, இங்கு எழுந்தருளி அந்த ஆலயத்தை சராவு மஹா கணபதி ஆலயம் என மக்கள் ஏற்கும்வண்ணம் காலத்தை மாற்றுவார்'. முனிவர் கூறிய அறிவுறையை ஏற்று; உடனே ஆலய நிர் மாணப் பணியினை மன்னன மேற் கொண்டான் . அவன் அம்பு எய்த இடத்தில் பாரத்துவாஜ முனிவர் சிவலிங்கத்தை பிரதிட் சை செய்து சரபேஸ்வரர் எனப் பெயரிட்டார் . அவருடைய சக்தியினால் நேத்திரா நதியின் நீர் அந்த குளத்தில் பசுவின் முகம் வழியே வழிந் து.

சராவு மஹா கணபதி ஆலயம் எழுந்த கதை

காலம் கடந்தது. வீ ரபாகுவிற்கு குழந்தைகள் இல்லை என் பதினால் அவரும், அவருடைய மனைவியும் தினமும் ஆலயத்திற் கு சென்று பூஜைகள், புனஸ்காரங்களை செய் து காலத்தைக் கடத்தினர் . அந்த நேரத்தில் ஹோய்சலா சம்ராஜ்யத்தில் இருந்த சந்திர சேகர ஜெயின் என்ற மன்னன் இன்னொரு நகரின் மன்னனான விஷ்ணுவர்தன் என்பவர் ஜெயின் மதத்தை விட்டு விலகி விஷ்ணு பக்தனாகி விட்டான் என்ற கோபத்தில்; அவர் மீது பகைமை கொண்டான் . இருவருக்கும் ஏற்பட் ட யுத்தத்தில் சந்திரசேகர ஜெயின் மரணம் அடைந்துவிட அவனுடைய மகனான வீ ரபங்கராஜா என் பவன் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடி வீ ரபாகுவிடம் தஞ்சம் அடைந்தான். பாரத்துவாஜ முனிவரின் அறிவுறைப்படி அவனை தன்னுடைய பிள்ளையாக தத்து எடுத்துக் கொண்டு அவனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வீ ரபாகு வனவாசத்திற்கு போய் விட்டார் .

அவன் பதவிக்கு அமர்ந்த நேரமே அந்த நாட்டிற்கு நல்ல நேரம் என
உணர்ந்த வினாயகர், தன்னுடைய தாயாரிடம் சென்று அந்த மன்னனன் கனவில் அவள் தோன்றி அவளுக்கு நேத்திரா நதிக்கரையில் கோரக்நாத் ஆசிரமத்திற்கு அருகில் ஒரு ஆலயம் அமைத்துக் கொடுக்குமாறு கூறும் படியும் , அவளுடைய ஆலயம் அமைந்த அடுத்து சில காலத்தில் தானும் அவளுக்கு நேர் எதிராக எழ இருக்கும் ஆலயத்தில் குடிகொண் டு அவளை தினமும் தரிசித்துக் கொண்டு இருக்க ஆசைப்படுவதாக கூறினார் . அவளும் தன்னுடைய
மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பங்கராஜாவின் கனவில் தோன்றி கோரக்நாத் ஆசிரமத்தின் அருகில் தான் புதைந்து கிடப்பதாகவும் , நாட்டு மக்களுடைய வாழ்வில் மஙகளம் தர தான் எழுந்தருள உள்ளதாகவும் , ஆகவே தன்னை வெளியில் எடுத்து அங்கேயே ஒரு ஆலயம் அமைக்கும்படியும் கூறினாள் .

முதலில் தான் கண்டது கனவா இல்லை உண்மையில் தேவிதான் தன்கனவில் வந்து அதைக் கூறினாளா எனக் குழம்பியவன் , மந்திரிகளின் ஆலோசனைப்படி, கனவில் தேவி ; கட் டளை இட்டபடி அவள் கூறிய இடத்திற்குச் சென்று பூமியில் புதைந்திருந்த தேவியை எடுத்து ஆலயத்தை அமைத்தான் . அந்த ஆலயத்திற்கு மங்களாம்பிகை எனப் பெயரிட்டான்.

தினமும் முறைப்படி பூஜைகளும் புனஸ்காரங்களும் மங்களாம் பிகை மற்றும் சரபேஸ்வரர் இருவருக்கும் நடந்து வந்தன . இன்னும் சில நாட்கள் கழிந்தது. பங்கராஜாவும் இறந்து போனார் . அவருடைய மகன் சந்திரசேகர பங்கராஜா என்பவர் ஆட்சியில் ஏறினார் . அந்த துளு நாட் டில் கேசவா என்ற ஏழை பிராமணர் வசித்து வந்தார் .அவரிடம் சிறந்த பாண்டித்தியம் இருந்தது. வினாயக பக்தர். மந்திர தந்திரக் கலைகளை நன்கு கற்றிருந்தவர்.

பிழைப்பிற்கு வழி தேடிக்கொண் டு இருந்தவர் . அவர் செய்யும் ஹோமத்தில் பிரசாதம் படைக்கும் பொழுது வினாயகரின் தும்பிக்கையே நீண்டு வந்து பிரசாதத்தைத் தொட்டுச் செல்லும் என்ற அளவிற்குப் பெருமை பெற்றிருந்தவர் . அவர் நேத்திரா நதிக்கரையில் இருந்த ஒரு வினாயகர் ஆலயத்தில் புஜாரியாக இருந்தார் .

ஒரு நாள் மன்னன் யோசனையில் இருந்தார் . நாட் டின் நன்மைகளுக்கு காரியங்கள் செய்யவேண்டும் . ஆனால் அரச வருமானம் போதவில்லை. என்ன செய்வது? அப்போது அவருக்கு அங்கிருந்த கடல்பகுதியில்; ஏழு கப்பல்களில் விலை உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் போவதாக தகவல் கிடைத்தது. மன்னன் நினைத்தான் 'அஹா …. அந்த பொருட்கள் நமக்குக் கிடைத்தால் நாடு எவ்வளவு செழிப்பாகும்? ' தன் எண்ணத்தை மற்றவர்களிடம் கூற அவர்கள் மந்திர தந்திர சக்திகளைப் பெற்ற கேசவாவின் உதவியை நாடலாம் எனக்கூற மன்னனும் அவரை அழைத்து அது குறித்துப் பேசினார் .

கேசவாவும் அந்த காரியத்தை செய் து தருவதாக உறுதியளித்து விட்டு வினாயகரை வேண்டிக் கொண்டு ஒரு ஹோமம் செய்து மந்திரப்பிரயோகம் செய்ய திடீர் என கடலில் பெரும் சுறாவளி தோன்ற அதில் சென்று கொண்டு இருந்த கப்பல்கள் தரைபகுதிக்கு வந்தன . அந்த கப்பலில் இருந்தப் பொருட்களை மன்னன் படையினர் கைப்பற்றினார் . அதன் பின் கப்பல்களை மீண்டும் போக விட்டனர் . ஏன்ன அதிசயம். சூறாவளி நின்று விட்டது, கடல் அமைதியாகியது. கேசவா பெரும் புகழ் பெற்றார் .

அதுதான் சரியான தருமணம் என எண்ணிய வினாயகர், கேசவாவின் கனவில் தான் தோன்றி ஒரு நாள் விடியற் காலையில் சரபேஸ்வர் சன்னதிக்கு மேல் தானும் தன்னுடைய மனைவி சித்தி லஷ்மியும் தோன்றப் போவதாகவும், தனக்கும் அவளுக்கும் மங்களாம்பினை எதிரில் சன்னதி அமைத்து வழிபடுமாறும் கூறி மறைந்தார் . அது போலவே மன்னனின் கனவிலும் தோன்றி கூறினார் . அவர் கூறியது போலவே ஒரு நாள் விடியற்காலை சரபேஸ்வரர் சன்னதியின் மேல் பகுதியில் வானில் அவர் சித்தி லஷ்மியுடன் சில நிமிடங்கள் தோன்றி விட்டு மறைய, அந்த அற்புதத் தோற்றத்தைக் கண்டபலரும் வியந்தனர் . ஆகவே அவருக்கும் அங்கு ஆலயம் எழுந்தது. நாடு செழிப் புற்றது. ஆலயம் பெரும் புகழ் பெறலாயிற்று.

வினாயகர் ஏன் சித்திலஷ்மியுடன்; அவதரித்தார் ?

வினாயகர் ஏன் சித்திலஷ்மியுடன் தோன்றினர் என்பது குறித்து புராண செய்தி உள்ளதாம் . வினாயகர் பல் வேறு கால கட் டத்தில் பல் வேறு நிலைகளில் ரூபம் எடுப்பார் எனவும் , இது கலி காலம் என் பதினால் மக்கள் பொருளாசைக் கொண்டு அலைவதினால் அதற்கேற்ப வளம் தரும் சித்திலஷ்மி வினாயகராக அவர் அவதரித் துள்ளார் எனவும் கூறுகின்றனர் .

சராவு மஹா கணபதியின் சக்தி

அந்த வினாயகரின் சக்திக் கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தது ஒரு நிகழ்ச்சி. திப்புசுல்தான் அந்த நாட் டின் வளத்தை பற்றிக் கேள்விப்பட்டு அதன் மீது படையெடுத்து வந்து ஆலயத்தை சூறையாட நினைத்தார் . தன் படையினருடன் துளுநாட் டின் அருகில் வந்தடைந்தவர் இரவு ஒரு இடத்தில் தங் கினார் . அவருடைய படையெடுப் பைப்பற்றிக் கேள்விப் பட்ட மக்கள் பயநது போய் வினாயகருடைய ஆலயத்தில் இருந்த பூஜாரியிடம் அடைக்கலம் ஆக அவரும் அவர்களை சமாதானப் படுத்தி அனைவரையும் வினாயகரிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறிய பின் தானும் மநதிரங் கள் ஓதலானார் . அன்று இரவு திப்புசுல்தானினால் தூங்க முடியவில்லை. அவர் கனவில் மீண்டும் மீண்டும் ஒரு யானை தோன்றி அவரை தூக்கித் தூக்கிப் போட்டு உதைப்பதைப் போல தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்க தூக்கம் இன்றி அவதியுற்றார் .

கண்களை மூடவே முடியவில்லை. ஆகவே அவர் தன்னுடைய படை வீ ரனான ஒரு இந்துவிடம் அது குறித்துக் கேட் டார் . அவரும் சகுனம் சரியில்லை என நினைத்ததினால் அந்த ஆலயத்தின் பூஜாரியை போய்ப் பார்த்து அதுகுறித்துக் கேட்க அவர் வினாயகர் திப்புவின் படையெடுப்பினால் கோபமுற்று உள்ளார் என் பதை எடுத்துக் காட்டினார் . அந்த படை வீ ரரும்; திரும்பிப்போய் அதை திப்புவிடம் கூற அதுவரை மனதில் தொடர்ந்து பீதியுடன் இருந்த அவர் மனம் மாறியது. அந்த ஊர் மன்னனை சந்தித்து உரையாடிய பின் படையெடுப் பைக்கைவிட்டு விட்டு அந்த சரபேஸ்வ ரர் வினாயகர் ஆலயதிற்கு பெருமளவு தானம் செய்வதாக வாக்குறுதிக் கொடுத்து விட்டுச் சென்றார்

நன்றி சாந்திப்பிரியா 

One response to “மங்களூர் சராவு சரபேஸ்வரர் ஆலயம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...