குஜராத் பிராம்மணி மாதா

குஜராத் மானிலத்தில் காந்தி நகர் என்ற மாவட்டத்தில் உள்ளது கலோல் என்ற தாலுக்கா. அதில் உள்ள தின்குஜ்ஜா என்ற கிராமத்தில் உள்ள தேதின்குஜ்ஜா திருக்கோவில். தின்குஜ்ஜாவில் உள்ள தின்குஜாயிட் என்ற பிரிவை சார்ந்த வணிகர்கள் பெருமளவில் வெளி நாடுகளில் சென்று தங்கி உள்ளனர். ஆனாலும் அவர்கள் சொந்த மண்ணில் உள்ள புராதானப் பெருமை வாய்ந்த ஆலயத்தை மறந்து விடாமல் அதைப் புதுப்பித்து வழிபடுகின்றனர். பிராம்மணி மாதா துர்கையின் அவதாரமாகவே கருதப்படுகின்றாள்.

ஆலய தேவியின் கதை பிரும்மணி மாதா பற்றிய கதை இது.பலகாலத்திற்கு முன் துதியா எனப்படும் இடத்தில் இருந்த மக்கள் தத்தம் வீடுகளைக் கட்ட பயன்படும் பொருட்களைக் கொண்டு வர பக்கத்து ஊருக்கு சென்று வர வேண்டி இருந்தது. அந்த காலத்தில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது என்பதினால் மாடுகள் மற்றும் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகளில் தான் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. பாதையோ சரியாக இல்லை. கற்களும், பள்ளங்களும் நிறைந்தே இருக்கும். பயணம் செய்வதும் மிகக் கடினம்.

அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் சில கிராமத்தினர் எப்பொழுதும் போல் பக்கத்து ஊருக்குச் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.அது மாலை மங்கிய நேரம் என்பதினால் எங்கோ வழி தவறி விட்டது. ஊரை விட்டு விலகி அடர்ந்த காட்டுப் பகுதியின் மையத்தில் சென்றுவிட்டனர். மாடுகள் வேறு களைத்துப் போய் தரையில் அமர்ந்து கொண்டு விட்டன. அவற்றால் அதற்கு மேல் வண்டியை இழுக்க முடியவில்லை. என்ன செய்வது எனக் குழம்பியபடி பயந்து கொண்டு அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். எவராவது உதவிக்கு வரமாட்டார்களா எனக் கூவி அழைத்துப் பார்த்தனர். எவரையும் காணவில்லை. சற்று நேரம் பொறுத்து தூரத்தில் இரண்டு கிராமத்துப் பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தது தெரிந்தது. அவர்களிடம் ஓடிச் சென்று தாம் போக வேண்டிய இடத்தைக் கூறி அதன் வழியைக் கூறுமாறு கேட்டனர். அவர்களும் வழியைக் கூறினாலும் பாதையை கண்டு பிடித்துக் கொண்டு போவது கடினம் என்றும், ஆகவே தம்மையும் வண்டியில் ஏற்றிக் கொண்டால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி காட்டுவதாகக் கூறினர். ஏற்கனவே மாடுகளினால் வண்டியை இழுக்க முடியவில்லை. படுத்துக் கொண்டு விட்டன.மேலும் இரு வரை ஏற்றி கொண்டால் அது என்ன செய்யும் என பயந்தபடி அவர்களிடம் கூற அந்த பெண்கள் ஒன்றும் கூறாமல் மாடுகளின் அருகில் சென்று அவற்றைத் தடவிக் கொடுக்க சோர்ந்து போய் படுத்திருந்த மாடுகள் துடிப்பாக எழுந்து நின்றன. அனை வரும் ஆச்சரியமாக அதைப் பார்த்தபடி இருந்த பொழுது அந்தப் பெண்கள் வண்டியில் ஏறிக்கொள்ள மாடுகள் சற்றும் சிரமம் இன்றி வண்டியை இழுத்துக் கொண்டு ஓடின. களைப்பினால் அவதியுற்றவர்கள் வண்டியிலேயே உறங்கி விட்டனர்.போகும் வழியில் வந்த தின்குசா கிராமத்தில் ஒரு ஏரியின் அருகில் ஒருவள் இறங்கிக் கொள்ள மற்றவள் அந்த கிராமத்தின் வடக்குப்புறம் இறங்கிக் கொண்டாள். அவர்களை எவரும் கவனிக்கவில்லை. காலை பொழுது புலர்ந்தது. அவர்களுடைய கிராமத்திற்கு வண்டி சென்று நிற்க முழித் தெழுந்தவர்கள் வண்டியில் ஏறிக் கொண்ட பெண்களைத் தேடினர். அவர்களை வண்டியில் காணவில்லை. அன்று இரவு அவர்களுடைய கனவில் ஒரு பெண் தோன்றினாள். தான்தான் பிரும்மணி மாதா எனவும் தனக்கு தான் இறங்கிக் கொண்ட தின்குச்சாவில் ஒரு ஆலயம் எழுப்பி தன்னை வழி படுமாறும் கூறினாள். அதற்கேற்ப அவர்கள் தின்குஜ்ஜாவில் பிரும்மணி மாதாவிற்கு அவளுடைய ரூபத்தை ஒரு சிலையாக வடிவமைத்து ஒரு ஆலயம் எழுப்பினர்.

அதன்பின் சில வருடங்களுக்குப் பிறகு வியாபார விஷயமாக படேல் எனப்படும் சில வணிகர்கள் ரங்கோன் நகரத்திற்குச் சென்றனர். துரதிஷ்டவசமாக அந்த ஊரில் இருந்தவர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்து விட்டு நடைப்பயணமாகவே அஸ்ஸாம் வழியாக தாயகம் திரும்பி வரலாயினர். அடர்ந்த காட்டில் நடந்து வந்தவர்கள் களைப்புற்று வழியையும் தவற விட்டனர்.துயர முற்றவர்கள்; ‘அம்மா பிராம்மணி மாதா நீதான் எங்களைக் காத்தருள வேண்டும்’ எனக் கதறி அழுதனர். என்ன வினோதம் திடீர் என ஒரு சிறிய பெண் அங்கு வந்தாள். கவலைப் படாதீர்கள் நான் உங்களுக்கு வழி காட்டி அழைத்துச் செல்கின்றேன்’ எனக் கூறி அவர்களை தன் பின்னhல் நடந்து வரச் சொன்னாள். ஆச்சரியமாக அவர்களுடைய களைப்பும் மறைந்தது.அவளுடன் சேர்நது நடக்கத் துவங்கியவர்கள் விரைவாக ஊர் திரும்பினார்கள். எப்படி அத்தனை சுலபமாக எந்த விதமான சிரமமும் இன்றி தாம் வந்து சேர்ந்தோம் என ஆச்சரியப்பட்டு அந்தப் பெண்ணைத் தேடிய பொழுது அவளைக் காணவில்லை. அந்த சம்பவம் பிராம்மணி மாதாவின் மேல் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கியது. அந்த பழைய ஆலயத்தை இன்னமும் புதுப்பித்து பெரிய தாக்கி வழி படலாயினர்.

பிரும்மணி மாதாவிற்கு இராஜஸ்தானிலும் சில இடங்களில் ஆலயம் உள்ளது. கோடா நகருக்கு அருகில் உள்ள அந்த ஒரு ஆலயத்தில் நானுர்று ஆண்டுகளுக்கும் மேலாக அகண்ட ஜோதி எரிந்து கொண்டு உள்ளதாம். பிராம்மணி மாதாவை மனதாற வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்குமாம். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் கூட்டம் நிறம்பி வழிகின்றது. குஜராத்தில் உள்ள மாதாவின் ஆலயமே முக்கியமான பிராம்மணி ஆலயம் என நம்பப் படுகின்றது

நன்றி சாந்திப்பிரியா 

One response to “குஜராத் பிராம்மணி மாதா”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.