பாவங்களை விளக்கும் தர்ப்பன பூமி

பாவங்களை விளக்கும் தர்ப்பன பூமி சென்னையில் இருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கூத்தனூர். அது ஸரஸ்வதி ஆலயத்திற்கு புகழ் பெற்ற தலம். மாணவ மாணவிகள் பரிட்சை நேரங்களில் அங்கு சென்று பேனா, பென்சில் போன்ற வற்றை வைத்து வணங்கி தாம் நன்றாக படிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் அந்த ஆலயத்துடன் சம்மந்தப்பட்டுள்ள திலகை பதி என

அழைக்கப்படும் தர்பண பூமி அதாவது ஸ்ரீ முக்தீஸ்வரர் – சொர்ண வல்லி ஆலயம் பற்றிய பின்னணிக் கதை பலருக்கும் தெரிந்திருக்காது.

இராமபிரான் இராவணனை வென்று தன் நாட்டிற்குத் திரும்பியதும்," தர்பண பூமிக்குச் சென்று அங்கு பித்ரு காரியங்களை செய்து முடிந்ததும் கூத்தனூர் ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கிய பின்னர் தான் அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின". ஆகவே முக்தீஸ்வரர்- சொர்ண வல்லி ஆலயம் செல்பவர்கள் கூத்தனூர் ஆலயத்திற்கும் சென்று வணங்கினால் பெரும் புண்ணியம் கிட்டும் என கருதப்பட்டது. அதன் கதையை இனிபடியுங்கள்:

ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலய அமைப்பு:

கூத்தனூருக்கு அருகில் உள்ளது ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலயம். அதன் பக்கத்தில் அரி-சிவா என்ற ஆறு உள்ளது. அந்த ஆலயத்தின் தெற்கு முக நுழை வாயிலில் நர முக வினாயகர் என்ற பெயரில் அதாவது மனித முகத்துடன் கூடிய வினாயகர் எழுந்தருளி உள்ளார். உலகில் எந்த ஆலயத்திலும் மனித உருவுடன் வினாயகர் காட்சி அளிக்கும் நிலையில் சிலை கிடையாது என்பது அ தன் விஷேசம். ஆலயத்தில் கிழக்கு நோக்கி நாகம் பிடித்திருந்த குடையின் கீழ் அமர்ந்தபடி முக்தீஸ்வரர் காட்சி தருகின்றார். ஆலயத்தின் பின்புறச் சன்னதியில் பித்ரு லிங்கங்களும், இராமபிரான் மற்றும் நந்தி சோதன் என்ற மன்னனின் சிலைகளும் உள்ளன. மற்றொருபுறத்தில் மந்தார மரமும்;, அதன் அருகில்; சிவலிங்கம், தஷ்ணா மூர்த்தி போன்ற சிலைகளும் உள்ளன.

ஆலய வினாயகர் – பார்வதி தேவியின் கதை:

வினாயகர் பற்றிய கதை என்ன எனில் ஒரு முறை பர்வதி அந்த இ டத்திற்கு வந்து குளித்துக் கொண்டு இருந்த பொழுது ஆண்கள் எவரும் வந்து விட்டால் என்ன செய்வது என எண்ணி நுழைவாயிலில் தனக்குக் காவல் இருக்க வினாயகர் மனிதத் தலையுடன் காட்சி தருகின்றார் மஞ்சளினால் செய்யப்பட்ட ஒரு உருண்டையை பிடித்து; வைத்து விட்டு குளிக்கச் சென்ற பொழுது அந்த மஞ்சள் உருண்டை அவளுடைய பிள்ளையான வினாயகராக உருவெடுத்து காவலில் நின்றது. அதன் பிறகு பல காலம் பொறுத்துத்தான் அங்கு வந்த சிவனாரை உள்ளே விடாமல் தடுத்த பிள்ளையாருடைய தலை போன கதையும், யானை முகம் பெற்ற கதையும் நிகழ்ந்தனவாம்.ஆகவே பார்வதி அந்த தலத்தில் குளிக்க வந்த பொழுது காவலுக்கு நின்ற அங்குள்ள வினாயகர் ஆலயத்தில் உள்ள வினாயகர் மனிதத் தலையுடன் காட்சி தருகின்றார்.

பார்வதி ஏன் அங்கு வந்தாள்? அதற்குக் காரணம் அவளுடைய தந்தை தஷ்யன் செய்த யாகத்தினால் ஏற்பட்ட அவமானத்தில் அவள் சிதையில் விழுந்து உயிர் துறந்தது, அதன் பின் மீண்டும் சிவபெருமானின் மனைவியாக உருப் பெற்று, அந்த நிகழ்சியினால் ஏற்பட்டிருந்த பாபத்தை தொலைத்துக் கொள்ள அந்த இடத்திற்கு வந்தாள். அதற்குக் காரணம் உலகில் உள்ள ஏழு தர்பண பூமிகளிலும் மிகவும் விஷேசமான தலம் அது என்பதினால் தான். அங்குள்ள நதியில் குளித்து விட்டு தர்பணம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகுமாம். பார்வதி மீண்டும் உரு எடுத்து சிவபெருமானின் துனையாகினாலும் சிதையில் விழுந்த பொழுது வெளியேறிய அவளுடைய உயிரின் தோஷத்தைக்களைக்க வேண்டும் என்பதற்காக அந்த தர்பண பூமிக்கு வந்து தனக்குத் தானே தர்பணம் செய்து கொண்டபின் ஒரு மந்தார மரத்தை அங்கு நட்டு வைத்தப்பின் அதன் அடியிலேயே அமர்ந்து கொண்டு பலகாலம் தவம் செய்து வந்தாள்.அவளுடைய தவத்தை மெச்சிய சிவ பெருமான் அவள் முன் லிங்க உருவில் தோன்றி அவளை தன் நாயகியாக முழு மனதுடன் ஏற்றாராம். ஆதனால் தான் அந்த ஆலயத்தில் உள்ள மந்தார மரத்தடியில் இன்றும் சிவலிங்கம் உள்ளது. அந்த மரம் விஷேசமாகக் கருதப்படுகின்றது. அந்த பூமியின் மகத்துவம் இன்னமும் கூடியது.

ஆலயத்திற்கு இராமபிரான் வந்தது எதற்காக?

இராம பிரான் தன்னுடைய மனைவி மற்றும் சகோதரர் லஷ்மணருடன் காட்டில் இருந்த பொழுது அவருடைய தந்தை மரணம் அடைநதார். ஆகவே தன்னுடைய தந்தைக்கு இறுதிக் கடன்களை இராமபிரானால் சரிவர செய்ய முடிய வில்லை.அதன் பின் நடந்த நிகழ்சிகளில் சீதையை அபகரித்துக் கொண்டு சென்ற இராவணனை வதம் செய்து விட்டு திரும்பியவர்; இராமேஸ்வரத்தில் சென்று தன்னுடைய தோஷங்கள் அனைத்தையும் களைய சிவபெருமானை பூஜித்தார். ஆனாலும் அவருடைய மனக் குழப்பம் தீராமல் மனதில் மகிழ்சி இன்றி இருந்தார். பிரும் மஹத்தி தோஷமும், தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை நிறைவாக செய்யாததினால் தொடர்ந்து கொண்டிருந்த தோஷமும் பூரணமாக விலகவில்லை. என்ன செய்வது என யோசித்துக் கொண்டு இருந்தவர் வசிஷ்ட முனிவரிடம் சென்று ஆலோசனைக் கேட்டார்.

வசிஷ்டரும் மாய வரத்தின் அருகில் உள்ள இன்றைய தர்பண பூமி உள்ள  தலத்தின் பெருமைப் பற்றிக் கூறி அங்கு குடி கொண்டு உள்ள முக்தீஸ்வாரனான சிவ பெருமான் தலத்தில் பித்ரு காரியங்களை செய்தால் அவருடைய அனைத்து தோஷங்களும் விலகி விடும் எனக் கூறினார். மேலும் சீதையைக் காப்பாற்ற நடந்த போரில் மரணம் அடைந்த ஜடாயுவை தன்னுடைய மனதில் தந்தைக்கு அடுத்த ஸ்தானத்தில் இராமபிரான் வைத்திருந்ததினால் அவருக்கு செய்ய வேண்டிய பித்ரு கடனும் பாக்கி இருந்ததினால் அவருக்கும் அந்த இடத்தில் தர்பணம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம். இராமபிரானும் உடனே அங்கு சென்று அரி – சிவாதலத்தில் குளித்தப்பின் அங்கு பித்ரு கர்மாக்களை செய்ததும் அவர் இட்ட பிண்டத்தை அவருடைய தந்தையான தசரதரே நேரில் தோன்றி ‘ இராமா, உன் இந்த நிறைவான பித்ரு காரியத்தால் மனம் மகிழ்ந்துள்ள நான் நீ கொடுத்த பிண்டத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன் . இனி அமைதியாக நான் மேலுலகம் சென்று விடுவேன் ’ எனக் கூறி மறைந்து போனாராம். அதன் பின் மரணம் அடைந்த ஜடாயுவிற்கும் லஷ்மணருடன் சேர்ந்து பித்ரு காரியங்களை செய்து முடித்தார். அதனால் தான் பிண்ட லிங்கங்களுக்கு எதிரில் வலது காலை மடித்த நிலையில் உள்ள இராமபிரானின் சிலையும் அந்த ஆலயத்தில் உள்ளது.

பித்ரு காரியங்கனை செய்து முடிந்ததும் மீண்டும் குளித்து விட்டு; லிங்க வடிவில் இருந்த முக்தீஸ்வரர் என்ற சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பின் வசிஷ்டர் கூறி இருந்தது போல் சற்று தொலைவில் இருந்த ஸரஸ்வதி ஆலயத்தில் அந்தர் மியாமியாக இருந்த பிரும்மாவையும் சென்று வணங்கி பிரும்மாவும் மனம் மகிழ்ந்து அவர் கணக்கில் இருந்த அனைத்து தோஷங்களையும் கணக்கில் இருந்து விலக்கி விட்டு தோஷ நிவாரணம் தர அனைத்து தோஷங்களும் இராமபிரானை விட்டு விலகின.

ஸ்ரீ முக்தீஸ்வரர்- சொர்ணவல்லி ஆலய பெருமை

பின்னொரு காலத்தில் கோதாவரி நதிக் கரையில் இருந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்த நந்தி சோதன் என்ற மன்னன் நாரத முனிவரிடம் ‘உலகிலேயே அனைத்துப் பாவங்களையும் தோஷங்களையும் விலக்கும் புண்ணிய பூமி எது?’ எனக் கேட்டதற்கு நாரதர் கூறினாராம்.‘மன்னா எந்த பூமியில் ஒருவர் தரும் பிண்டங்களை இறந்து போன ஆத்மாக்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்கின்றனரோ அந்த பூமியே புண்ணிய பூமி’ என்று கூறிவிட்டு சென்றாராம். அதற்கேற்ப அந்த மன்னன் அங்கு வந்து தர்பணம் செய்தான் எனவும் அதற்கு சான்றாக பித்ரு லிங்கங்களுக்கு எதிரில் அமைந்துள்ள நந்தி சோதமன்னனின் சிலையையும் காட்டுகின்றனர்.

அதனால்தான் ஜாதி மத பேதமின்றி குடும்பத்தினர் தெரிந்தவர் தெரியாதவர் உறவினர் என எவருக்கு வேண்டுமானாலும் அந்த ஆலயத்திற்கு வந்து எவர் வேண்டுமானாலும் தர்பணம் செய்து பிண்டம் போட்டால் இறந்து போனவர்களுடைய ஆத்மாக்கள் சாந்தி அடையும் என்பது மட்டும் இன்றி இறந்து போனவர்களுடைய ஆத்மாக்களின் நிறைவான ஆசி கிடைப்பதினால் தர்பணம் செய்பவர்களின் பாபங்களும் விலகி விடுகின்றன எனக் கூறுகின்றனர்.

நன்றி சாந்திப்பிரியா 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...