வால்மார்ட் வகையறா குடும்ப சேமிப்புக்கும் ஆபத்து ?

 வால்மார்ட் வகையறா குடும்ப சேமிப்புக்கும்   ஆபத்து ? 'மதுரையிலிருந்து, கார்லயே குற்றாலத்துக்கு போயிட்டு வரலாம்' என்று நேற்று வரை யோசித்துக் கொண்டிருந்த நம்மவர்களில் பலர், நிலைமை சரியில்ல, பேசாம பஸ்ஸ{ல போயிட்டு வரலாம்' என்று மாற்றி முடிவெடுக்க ஆரம்பித்துள்ளனர் இதற்க்கு . காரணம்……. உலகப் பொருளாதாரம், பாதாளம் நோக்கி உருண்டு கொண்டிருப்பதுதான்.

இதன் எதிரொலியாக, இந்திய நாட்டின் பொருளாதாரம்…….சற்றே மந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரேயடியாக கவிழ்ந்துவிடாமல், தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது! இதற்குக் காரணமே..நம் சகோதர, சகோதரிகள்தான். ஆம், பாரம்பரிய வாழ்க்கை முறையான சேமிப்புப் பழக்கத்தினாலும், கடன் வாங்குவதைப் பற்றிய சமுதாய
கண்ணோட்டத்தினாலுமே… நம் பொருளாதாரம் சாய்ந்து விடாமல் நின்று கொண்டிருக்கிறது.

காலம் காலமாக உடைக்க முடியாத இந்தக் கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள்… பெரும்பாலும் பெண்களே என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். இந்நிலையில், இதற்கு வேட்டு வைக்கும் முடிவாக வந்து குதித்திருக்கிறது.. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு! ஆம். நாம்  கட்டிக்காத்து வந்த பாரம்பரியம் மிக்க சேமிப்பை, ஒட்டுமொத்தமாக சுரண்டிக் கொண்டு ஓட்டமெடுக்க தயாராக காத்துக் கொண்டிருக்கின்றன.. பன்னாட்டு நிறுவனங்கள்!

சில்லறை வணிகம் என்பதில் பெரும்பாலும் சமையலறை முதற்கொண்டு, வீட்டு உபயோகப் பொருட்களே பெரும் பங்கு வகிப்பதால், பெண்கள் தான் இந்த வியாபாரத்தின் மொத்த இலக்கு. பொருட்களின் விற்பனைச் சந்தை இவர்களை வைத்தே உருவாக்கப்படுகிறது அல்லது நொறுக்கப்படுகிறது.

எதை வாங்க வேண்டும், எவ்வளவு வாங்க வேண்டும்' என்கிற இந்த பெண்களின் உள்ளுர் திட்டமிடலை, நம் சந்தையில் இறங்குவதற்காக பெரும்பெரும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டு தயாராக நிற்கும் உலகமகா நிறுவனங்கள்.. முதலில் காலி செய்துவிடும். ஆம், குடும்பத்தின் வரவு அறிந்து, திட்டமிட்டு, தேவைக்கேற்ப பொருள் வாங்கி, கடனில்லாத நிம்மதி வாழ்வு வாழும் பெரும்பான்மை நடுத்தர வர்க்கமே.. அந்நிய முதலீடுகளால் குறி வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஆளுக்கொரு பிராண்ட் நேரத்துக்கு ஒரு வகை உணவு… என நுகர்வு கலாசாரத்தை மையப்படுத்தி நகரும் இந்த படாடோப பொருளாதாரச் சிந்தனை மக்களின் கையில் உள்ள பணத்தையெல்லாம், மொத்தமாகச் செலவழிக்கத் தூண்டுவதையே அடிப்படையாக கொண்டிருக்கிறது.

இன்று, தன் வாழ்நாளின் ஆரம்ப கட்டத்திலேயே மாதம் 50 ஆயிரம் என சம்பாதிக்கும் இளைஞர்கள்- இளைஞிகளில் எத்தனை பேர், தங்களுடைய சேமிப்பை சரியாக வைத்திருக்கிறார்கள் என பார்த்தால்.. ஏமாற்றமே மிஞ்சும். குடும்பத்தின் சராசரி ஒரு மாத மளிகை செலவை, ஒரே உடை வாங்குவதற்கு செலவு செய்துவிட்டு வரும் உறுத்தலில்லாத மனநிலைக்கு.. கார்டு கலாசாரம் அவர்களi மாற்றிக்கொண்டிருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்களே கூட பணமாகக் கொடுக்கும் போது பொருட்களைத் தேர்வு செய்வதிலும், கார்டு தேய்க்கும்போது வேறொரு மனநிலையிலும் இருப்பதை சிறிது சிந்தித்தால், இதன் ஆபத்தை உணர முடியும்.

இப்படி, நம் மக்களை வாங்கத் தூண்டும் மனநிலைக்கு கொண்டு செலுத்துவதற்காகத்தான், இந்த மாபெரும் சந்தையை திறந்துவிடச் சொல்லி மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்.. யார் யாருக்கோ மிகப்பெரிய தொகைகளை 'லாபியிங்' என்ற பெயரிலே கொட்டிக் கொடுத்துக் கொண்டுள்ளன. இங்கே சந்தை என்பதில் நம் சகோதரிகளே இலக்கு எனும் போது, அரசாங்கத்தின் இந்தக் கொள்கை முடிவு, நேரடியான தாக்கத்தை நம் குடும்பங்களில்தானே உண்டாக்கும்!.

விவசாயத்திலும் சில்லறை வணிகத்திலும் ஈடுபட்டு, அவற்றின் மூலம் குடும்பங்களைக் காப்பாற்றி வரும் கோடிக்கணக்கான மக்கள், சுயமுன்னேற்றம், சுயசார்பு என்பதை இழந்து.. ஏதோ ஒரு நிறுவனத்தின் பங்குச் சந்தை முடிவுக்கேற்ப, மதிப்புக்கேற்ப வாழ்க்கை நடத்தும் மாதச் சம்பளக்காரர்களாக மாறிவிடும்போது.. நாட்டின் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும்?

காலம் செல்லச் செல்ல, ஒட்டுமொத்த சந்தை, பொருளாதாரம், பொருட்கள் தேர்வு, விற்பனை முறை.. இவற்றை விரல்விட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களே முடிவு செய்ய முடியும் என்கிற நிலைமை வரும். இது, சமுதாய இணக்கத்தை பாதிக்கும். பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவில் விவசாயிகளும், தொழிலாளர்களும் நடத்திவரும் போராட்டத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

அந்நிய முதலீட்டு முடிவை ஆதரிக்கும் மத்திய அரசாங்கமும், ஒரு சில  அரசியல் கட்சிகளும்.. 'மக்களிடம் தேவையி;ல்லாத பயத்தை எதிர்கட்சிகள் உருவாக்குகின்றன' என்று விமர்சிக்கிறார்கள். இந்தோனேஷியா, தாய்லாந்து முதற்கொண்டு அமெரிக்காவின் பெருநகரங்கள் வரை சில்லறை வணிகத்தில் உள்ள மாபெரும் வணிக நிறுவனங்களால் ஏற்படும் பாதிப்புகள், நம் நாட்டிலும் நிகழும்.

ரெடிமேட் உடைகள் சில நேரம் நமக்கு பொருந்திப் போகலாம். ஆனால் நம் வடிவுக்கேற்ப உடைகளை தைத்து அணியும் போது ஏற்படும் தன்னம்பிக்கையும், சுகமும் போலத் தான்.. இந்த மண்ணுக்கேற்ப உருவான சில்லறை வணிக சுதேசி கலாசாரம்.

நம் விவசாய சகோதரர்களின் உழைப்புக்கேற்ப பலனை அளிக்கவும், சிறு கடைக்காரரின் பொருட்களுக்கான தரத்தையும், தூய்மையையும் உறுதி செய்யவும், நுகர்வோரின் நலனைபாதுகாக்கவும் தவறிவிட்டு.. மாபெரும் அயல்நாட்டு நிறுவனங்களை, நம் சந்தைக்கு

அழைத்தால்.. இந்நாட்டின் வருங்கால சந்ததி , அவர்களின் விற்பனைப் பிரதிநிதிகளாக மட்டுமே கையேந்தி நிற்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்!.

நன்றி; வானதி சீனிவாசன் பாஜக மாநில செயலாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...