இந்து கடவுள்கள் முட்டாள் தனமாக சித்தரிக்கபடுகிறதா ?

இந்து கடவுள்கள் முட்டாள் தனமாக சித்தரிக்கபடுகிறதா ? உங்கள் கடவுள்கள் ஒருவர் பாம்பில் படுத்திருக்கிறார், ஒருவர் யானை முகத்துடன் எலிமேல் உட்கார்ந்திருக்கிறார், ஒருவர் கழுத்தில் பாம்புடன் இருக்கிறார், இதைப்போனற முட்டாள் தனமாக இறைவனை ஏன் சித்தறிக்கிறீர்கள் ? உங்கள் சிவ‌லிங்கம் எதை குறிக்கிறது என்ற உண்மையை சொல்ல முடியுமா ?

தத்துவ ஞானத்தின் ஆழத்தை பார்த்தவர்கள் ஹிந்துக்கள். ஐன்ஸ்டீன் முதல் அணு விஞ்ஞானி ஓப்பன்ஹீமர் வரை பலரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கும் அளவிற்கு தன்னுள்ளே அற்புதமான கோட்பாடுகளையும், ஈடு இனையற்ற சித்தாந்தங்களையும் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த தத்துவங்களை கொண்ட ஹிந்து தர்மம், முட்டாள்தனமான விடயங்களை முன்நிறுத்த வாய்ப்பே இல்லை. பாமரனையும் தன்பால் ஈர்க்கும் வண்ணம் இறைவனை உருவகப்படுத்திய சனாதன தர்மம், தத்துவ ஞானிகளையும், அறிஞர்களையும் தன்பால் நிலை நிறுத்திக் கொண்டது

ஒரு பிள்ளையார் சிலையை பாருங்கள். அழகிய யானை முகம், ஒரு குழந்தையையும் அது கவர்ந்துக் கொள்ளும், அவரின் பால்ய கதைகள் அனைவரையும் கவரும், ஒவ்வொரு கிராமத்திலும் அவர் மரத்தடியிலும், சிறு குடிசைக்கு அடியிலும் அமர்ந்துக் கொண்டு பாமரன் முதல் படித்தவர் வரை பலரையும் கவர்கிறார்.

அதே பிள்ளையாரை ஒரு தத்துவஞானி எப்படி பார்க்கிறான்.

அவருடைய பெரிய தலையோடு கூடிய தும்பிக்கை ஓம் என்கிற ப்ரணவத்தை குறிக்கிறது. அவருடைய பெரிய காதுகள், அவரின் கேள்வி ஞாணத்தையும், வேதங்களை உணர்ந்து வெளிப்படுத்தும் ஆற்றலையும் குறிக்கிறது. அவரின் வாகணமான எலி ஆசையையும், அலைபாயும் மனதையும் குறிக்கிறது. அத்தகைய ஆசையையும், அலைபாயும் மனதையும் அடக்கி அவர் திடமாக அமர்ந்திருக்கிறார்.

அடுத்து பாற்கடலில் படுத்திருக்கும் விஷ்னுவை பாருங்கள். ஐந்து தலைக்கொண்ட பாம்புகள், ஐந்து புலண்களை குறிக்கிறது. உள்நோக்கி பார்க்கும் அந்த ஐந்து தலைகளும், உள்நோக்கி பார்க்கும் அமைதியான மனதை குறிக்கிறது. அந்த அமைதியான மனம் எதை பார்க்கிறது ? பரம்பொருளான  விஷ்னுஇறைவனை பார்க்கிறது. அப்பரம்பொருள் பேராணந்த நிலையில் தன்னுடைய எல்லையற்ற தன்மையில் இருக்கிறார். அவர் எல்லையற்ற ப்ரபஞ்சத்தை குறிக்கிறார். அவரை சூழ்ந்துள்ள‌ பாற்கடலோ எல்லையற்ற ஆணந்தத்தை குறிக்கிறது. அவரின் கரங்களில் உள்ள சக்கரம் காலச் சுழற்சியை குறிக்கிறது. அவரின் மற்றொரு கரத்தில் உள்ள சங்கு ப்ரபஞ்சத்தின் ஐந்து தத்துவங்களை குறிக்கிறது.

அடுத்து புலித்தோல் அணிந்திருந்த சிவனை பார்ப்போம். அவரின் உடல் முழுதும் பூசப்பட்ட திருநீர் கண்களுக்கு புலப்படும் ப்ரபஞ்சத்தை குறிக்கிறது, அவரின் ஆடையில்லாத திருமேணியோ, அந்த ப்ரபஞ்சத்தின் ஆதார நிலையை குறிக்கிறது. அவரின் தலையில் உள்ள கங்கை அவர் பாவங்களையும், அறியாமையையும் அழிப்பவர் என்பதை குறிக்கிறது. அவரின் தலை அருகில் உள்ள தேய்பிறை, ப்ரபஞ்சம் தோன்றுவதையும், அழிவதையும் குறிக்கிறது. அவரின் நெற்றியில் உள்ள த்ரையம்பகம் எனும் நெற்றிக் கண், அவரின் எல்லையற்ற சிவன் ஞாணத்தையும், ஆற்றலையும் குறிக்கிறது. அவரின் கழுத்தில் உள்ள பாம்பு அவரின் யோக சக்தியை குறிக்கிறது. இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

லிங்கம் என்பது குறியீடு அல்லது முத்திரை என பொருள்தரும். லிங்கம் என்பது பிரமாண்டம் அல்லது ப்ரபஞ்ச மூலாதார‌த்தை குறிக்கிறது. அது சத்யம், ஞாணம் மற்றும் ஆணந்தத்தை குறிக்கிறது. லிங்கம் ப்ரக்ருத்தி எனப்படும் இயற்கை, புருஷா எனப்படும் இறைவனுடன் இனைவ‌தை குறிக்கிறது. சிவலிங்கம் உருவம‌ற்ற இறைவனை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாந்த்ரீகர்களும், மேற்கத்திய அறிஞர்களும் லிங்கத்தை ப்ரபஞ்சத்தின் விதையான ஆதாரமாகவும், அதன் பீடத்தை ப்ரபஞ்ச சக்தியாகவும் சொல்கிறார்கள். இவை எதைப்பற்றியும் அறியாமல் சில மனநோயாளிகளும் மூளை சலவை செய்யப்பட்டவர்களும் அதை தங்கள் குறுகிய எண்ணங்களால் குறுக்கி, அது வெறும் ஆண் பெண் உறவை மட்டுமே சித்தரிக்கிறது என்று சொல்வதுதான் வேடிக்கை.

இப்படி ஹிந்து மதத்தில் சிலைகள் ஒவ்வொன்றும் இறைவனின் பேராற்றலை பல்வேறு விதமாக உருவகப்படுத்தி, ஒரு பாமரனுக்கும் அதை எளிதாக கொண்டு சேர்க்கிறது. ஒரு தத்துவ புத்தகத்தை படிக்கையில் ஏற்படும் ஞானம் ஒரு சிலையிலேயே உருவகப்படுத்த படுகிறது. ஒரு பக்தன் அச்சிலையை தரிசிக்கும் போதே அதில் உருவகப் படுத்தப்பட்டுள்ள உயர்ந்த தத்துவங்கள் அவனுக்குள் உயர்ந்த எண்ணங்களை உண்டாகி அவனை செம்மை படுத்துகிறது. ஒரு வெற்று சுவரை வெறித்து பார்த்து பிரார்தனை செய்வதற்கும், உயர்ந்த தத்துவங்களை உருவகப்படுத்தி, நம்முள்ளே உயர்ந்த எண்ணங்களை உண்டாக்கும் சிலையை, வழிபடுவதற்கும் வித்யாசங்கள் இருக்கிறதல்லவா ?

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...