காமக் குத்தாட்டமா கிரிக்கெட்டா ? ஐ பி எல் க்ளப்புகளா, நைட் க்ளப்புகளா ?

 காமக் குத்தாட்டமா கிரிக்கெட்டா ? ஐ பி எல் க்ளப்புகளா, நைட் க்ளப்புகளா ? கிரிக்கெட் என்றாலே, "ஜென்டில்மேன் கேம்" என்பது போய், இப்போது சூதாட்டத்தின் ஒரு அங்கமாக அது இருக்கிறது. அக்காலத்தில் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு வருமானம் மிகக் குறைந்ததாக இருந்தது. இருப்பினும் பலர் கிரிக்கெட்டை நேசித்தார்கள். கிரிக்கெட் நம் தேசப் பற்றை பறைசாற்றும் ஒரு ஊடகமாக இருந்தது. கிரிக்கெட்டை எங்கு நடந்தாலும் சென்று பார்க்கும் ரசிகர்களும், ரேடியோவில் அதன்

வர்ணனையை ஆவலுடன் கேட்கும் ரசிகர்களும், அதன் அடிப்படைகளை தெரிந்தவர்களாக, அதன் கலை நுட்பமான தன்மையை பாராட்டுபவர்களாக இருந்தனர். 1983ல் "கப்பில் தேவ்" என்கிற தேச பற்று மிகுந்த ஒரு தலைவனின் கீழ் சென்ற அணிக்கு எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. பெரிதளவில் எந்த ஸ்பான்ஸரும் இல்லை. வருமானமும் பெரிதாய் ஒன்றும் இல்லை. ஆனால் தேசப்பற்று மிகுந்து இருந்தது. தன்னை மிஞ்சி தேசம் நின்று இருந்தது. ஆனால் இன்று ?

கிரிக்கெட் எனும் பெயரில் காசினோ (சூதாட்ட விடுதி) அல்லவா நடக்கிறது ?

ஒரு சூதாட்ட விடுதியில் என்ன இருக்குமோ அது எல்லாமே இந்த 20:20 என்படும் இந்த சூதாட்ட விளையாட்டில் உள்ளது.

சூதாட்ட மையங்களில், பரபரப்பு அதிகமாய் இருக்கும். அது போலவே அமேரிக்கன் பேஸ்பாலை போன்ற‌ இந்த 20:20 யிலும், வரும் பந்தை எல்லாம் அதன் தகுதிக்கு தகுந்தது போல் ஆடாமல், மட்டையை கண்ட மேனிக்கு சுற்றி பந்தை அடிக்கும் முறை. ஒவ்வொரு பந்திற்கும் சிக்சரை எதிர்ப்பார்க்கும், வெறிப் பிடித்த இரசிகர்கள். பந்து வீச்சாளருக்கு சுத்தமாய் சாதகமில்லாத மைதானம். ஸ்ட்ர்ரோக் ப்ளேயர் என்பதையே கிரிக்கெட் அகராதியில் இருந்து எடுத்துவிட்ட
கொடுமை. அமெரிக்காவில் "டபுல்யு டபுல்யு எப்" எனப்படும் வெறித்தனமான அடிதடி சண்டையை பார்க்கும் காட்டு ரசிகர்கள் போல் "அடி அடி அடி" என்று கதறும் ரசிகர்கள்.

காசினோக்களிலும், பார்களிலும் அரை நிர்வான பெண்கள் ஆடிக்கொண்டிருப்பார்கள். நம் 20:20 யிலும் அதே முறைதான்.
நம் வெறி பிடித்த ரசிகர்களிடம் வசூல் செய்யப்பட்ட பனம் வெளிநாட்டு அழகிகளுக்கு வீணாகிறது. அரை குறை ஆடையில் அவர்கள் ஆடும் ஆட்டத்தை நாம் குடும்பத்தோடு தொலைக்காட்சியில் காண வேண்டிய சூழ்நிலை.

அடுத்து சிறந்த சூதாட்ட காரர்களை மன்னிக்க வீரர்களை ஏலத்தில் எடுக்கிறார்கள். இதில் கோடிக்கணக்கில் பனம் வெளிநாட்டு வீரர்களுக்கு சென்று நம் தேசத்தின் அந்நிய செலாவனி வீணாகிறது. மிகப்பெரும் கம்பெனிகள் இதில் போட்டிப் போடுகின்றன. சினிமா நட்சத்திரங்கள் இதில் பங்கு பெற அழைக்கப்படுகிறார்கள். ஷாருக்கான், ப்ரீதி ஜிந்தா போன்ற பல‌ சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொரு க்ளப்புகளையும் எடுத்துக் கொண்டு கோடிக் கணக்காக சம்பாதிக்கிறார்கள். அரை குறை ஆடையில் மந்திரா பேடி போன்ற பெண்கள் வர்ணனை என்கிற பெயரில் மேலும் ரசிகர்களை கவர பணி அமர்த்தப் படுகிறார்கள்.

கிரிக்கெட் என்பதே உலகில் அதிக போட்டி இல்லாத, பத்து முதல் பண்ணிரெண்டு அணிகளையே கொண்ட ஒரு விளையாட்டு. 120 கோடி மக்கள் உள்ள இந்த தேசம், ஒலிம்பிக் போன்ற உலகளாவிய விளையாட்டு போட்டிகளில், இருக்கும் இடம் தெரியாமல் மண்ணை கவ்வி வரும் வேளையில், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள கிரிக்கெட்டை மட்டுமே வைத்துக்கொண்டுள்ளது. அந்த கிரிக்கெட்டிலும் இந்த சூதாட்ட முறை புகுந்து அதை மேலும் சீரழித்துக் கொண்டு இருக்கிற‌து.

கலாச்சார சீர்கேட்டை ஐ பி எல் எனும் இந்த சூதாட்ட முறை எப்படி வளர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை நம்மில் பெரும்பாலோர் அறிவதில்லை. நைட் க்ளப்புக்கு செல்வது கேவலம் என்று நினைக்கும் நம் சமுதாயம், இந்த "ஐ பி எல்" எனும் சூதாட்ட முறையை மட்டும் அங்கீகரிப்பது கேள்வி குறிதான்.

"இம்சை அரசன் 23ம் புலிகேசி" திரைப்படத்தில் வருவது போல், ஊழல்களில் உலக சாதனை புரிந்து வரும் மத்திய அரசு, மக்களை முக்கிய பிரச்சினைகளில் இருந்து திசைத்திருப்ப இந்த ஐ பி எல் குத்தாட்டத்தை ஒரு ஊடகமாக பயன் படுத்துகிறதோ என்கிற ஐயம் எழுகிறது.

லாட்டரி சீட்டை தடை செய்த தமிழக அரசு, இந்த ஐ பி எல் எனும் பெயரில் நடக்கும் மிகப்பெரும் சூதாட்டத்தையும் தடை செய்ய வேண்டும். எப்படி லாட்டரி விற்பனையால், தூண்டப்பட்ட பல லட்சம் மக்கள் வாழ்க்கை சீரழிந்ததோ, அதை விட பண்மடங்காக இன்று நம் இளைஞர்களை அழிக்கும் வீரியத்துடன் இந்த ஐ பி எல் திகழ்கிறது.

இதை எதிர்த்து ஒரு பெரும் புரட்சி வர வேண்டும் என்று ஒரு பகல் கன‌வை காண்கிறேன்.

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...