உத்தரகண்டில் வெள்ள நிவாரணப்பணிகளை உரியமுறையில் மேற்கொள்ள தவறிய மாநில அரசை நீக்கவேண்டும் என்று மக்களவை எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் “டுவிட்டர்’ இணைய தளத்தில் திங்கள் கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
உத்தரகண்ட் அரசு, வெள்ள சேதத்தை உரியவகையில் கையாளவில்லை. நிவாரணப்பணிகளை மேற்கொள்ள திறனற்று இருக்கும் அந்த அரசை உடனடியாக நீக்கவேண்டும்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே பாஜக. தலைவர்கள் உத்தரகண்ட்க்கு பயணம் மேற்கொள்ளவில்லை. அங்கு விஐபி.க்கள் யாரும் செல்லவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதாலேயே நாங்கள் அங்கு செல்லவில்லை.
இந்த விவகாரத்தை பொறுத்த வரை, உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தீவிரம் குறித்து நான் தான் மத்திய அரசை உஷார் படுத்தினேன். உள்துறை அமைச்சருடன் கடந்தமாதம் 18ஆம் தேதி தொலை பேசியில் பேசியபோது, அந்தமாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தன்மை குறித்து நான் அவரிடம் எடுத்துக்கூறினேன்.
ஆட்சியின் குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டும்போது, அவை அரசியல் செய்வதாக கூறி அரசு தப்பித்துக்கொள்ள நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தோல்விகளை மறைத்து, தப்பிக்கமுடியாது. உத்தரகண்டில் மத்திய அரசு எதையும்செய்யவில்லை. அங்கு அனைத்து மீட்பு நடவடிக்கைகளையும் ராணுவம், விமானப்படை, இந்தியதிபெத் எல்லை பாதுகாப்புப் படை ஆகியவை தங்களின் உயிரைப் பணயம்வைத்து மேற்கொண்டன. ஆனால் இந்தப்பணிகள் அனைத்தையும் தாங்களே மேற்கொண்டதாக அரசு உரிமை கோர கூடும்.
ராணுவம் , துணை ராணுவ படையினரின் முயற்சிகளுக்காக அவர்களை வணங்குகிறேன். இந்தவிஷயத்தில் மாநில அரசும் எதையும் செய்யவில்லை. அங்கு மக்கள் பட்டினிகிடக்கிறார்கள்.
இறந்தவர்களின் உடல்களில்இருந்து தங்கம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப் படுகின்றன. நெருக்கடியான நேரத்தில் ஆட்சி நடத்த முடியாதவர்கள், ஒருநாள் கூட ஆட்சியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என சுஷ்மா தெரிவித்துள்ளார்.
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.