மக்களின் வறுமையை கேலி செய்யும் விதமாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்

 மக்களின் வறுமையை கேலி செய்யும் விதமாக பேசுவதை  நிறுத்திக்கொள்ள வேண்டும் மக்களின் வறுமையை கேலிசெய்யும் விதமாக பேசிவரும் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான் தெரிவித்துள்ளார் .

மத்தியப்பிரதேச மாநிலம், தார்மாவட்டம், மானாவாரில் பா.ஜ.க.,வின் ஜனாசீர் வாத் யாத்திரையை புதன் கிழமை தொடங்கிவைத்து பேசிய அவர், பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி, திட்டக்கமிஷன் அதிகாரிகள் வறுமைக்கோட்டில் உள்ள மக்களை கேலியாகப் பேசி வருகிறார்கள். இதை அவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அலாகாபாத்தில் அண்மையில் நடைபெற்றவிவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, ஒருவருக்கு உணவு, உடை மற்றும் இருப்பிடம் கிடைத்து விட்டால் மட்டும் வறுமையை ஒழித்து விட்டதாக அர்த்தமல்ல. ஒருவருக்கு தன்னம்பிக்கையிருந்தால் அவர் வறுமையில் இருந்து மீண்டுவிடலாம் என வறுமையில் பாதிக்கப்படுவோரை மிகவும் மலிவாக விமர்சித்துள்ளார்.

ராகுலின் இந்தவிமர்சனம் கண்டனத்துக் குரியது. வறுமைக் கோட்டிலிருந்து ஒருவர் மீள அவருக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியம். இந்த மூன்றையும் கொடுக்க முடியாவிட்டால் அது குறித்து பேசுவதற்கு காங்கிரஸýக்கு தகுதியில்லை கிராமப்புறங்களில் 27 ரூபாய் வருமானம் ஈட்டுவோர் வறுமைக் கோட்டைத் தாண்டிவிட்டதாக திட்டக்கமிஷன் தெரிவித்துள்ளது. இதை காங்கிரஸ்தலைவர்களும் ஆமோதித்துள்ளனர். அவர்களின் இந்தக்கணிப்பு கண்டனத்துக்குரியது. 15 ரூபாய்க்கு முழுச் சாப்பாடே சாப்பிடலாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...