கோப்புகள் மாயமான விவகாரத்திலிருந்து பின்வாங்க மாட்டோம்

கோப்புகள் மாயமான விவகாரத்திலிருந்து  பின்வாங்க மாட்டோம்  நிலக்கரி ஊழல்வழக்கின் கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் வைத்த இரவு விருந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது . இந்த விவகாரத்திலிருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பாஜக திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடைய முக்கியக்கோப்புகள் மாயமான விவகாரம் மற்றும் பெட்ரோல் டீசல்விலை உயர்வு தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பிவருகிறது இந்த விவகாரத்தினால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது . ‘பைல்’ எங்கே, அதை முதலில்சொல்லுங்கள் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டுவதற்காகவும், நாடாளுமன்றம் செயல்பட ஒத்துழைக்கவேண்டும் என்றுகோரியும் நேற்று இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிரதமர் மன்மோகன்சிங். இதில் மூத்த பா.ஜ.க தலைவர்கள் அத்வானி, சுஷ்மாசுவராஜ் போன்றோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது நாடாளுமன்றம் சுமூகமாக இயங்க ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அவர் கோரிக்கைவிடுத்தார். மேலும் ஓய்வூதியமசோதா உள்ளிட்ட பலமுக்கிய மசோதாக்களை பிரச்சினையின்றி நிறைவேற்ற உதவிடவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். கோப்புகள் காணாமல்போனது தொடர்பாக தீவிரவிசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இருப்பினும் இந்தவிவகாரத்தில் பின் வாங்குவதில்லை என்று பா.ஜ.க அறிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...