ஜம்முகாஷ்மீர் எல்லை கிராமத்தை ஆக்கிரமித்த பாகிஸ்தான்

 ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர கிராமமான ஷாலாபடாவை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாக திடுக்கிடும்தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் எல்லையில் பதற்றமானசூழல் நிலவிவருகிறது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அத்துடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து திடீர் தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புடன் நியூயார்க்கில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஷாலாபடா என்ற எல்லையோர கிராமத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கிராமம் கைவிடப்பட்டகிராமம். இங்கு மக்கள் கைவிட்டுச்சென்ற வீடுகளில் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரை வெளியேற்ற இந்திய படையினர் தாக்குதல்நடத்தி வருவதாகவும் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.