தில்லியில் மறுதேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்போம்

 தில்லியில் மறுதேர்தல் வந்தால் ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்போம், ஊழலுக்கு எதிராக அண்ணாஹசாரே நடத்திய போராட்ட இயக்கத்தால் தான் ஆம் ஆத்மி இந்த வெற்றியை பெற்றுள்ளது. அண்ணா ஹசாரேவின் ஆசி அக்கட்சிக்கு இருப்பதுபோன்ற தோற்றம் உருவானதே வெற்றிக்கு காரணம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக.,வின் தில்லி பிரதேச மூத்த தலைவர் ஹர்ஷவர்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் மறுதேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 43 முதல் 48 இடங்கள்வரை கிடைக்கும் என்று எங்கள் கட்சித்தலைவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஆகையால், பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

காங்கிரஸ் கட்சி கூட மறுதேர்தலில் 13 முதல் 18 இடங்கள்வரை பெறக்கூடும். ஆனால், ஆம் ஆத்மிகட்சிக்கு 15 இடங்கள் கூட கிடைக்காது என்று எங்கள்கட்சி கணித்துள்ளது.

நடந்துமுடிந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியிடம் பா.ஜ.க 22 இடங்களில் நேரடியாக தோற்றது. இந்த இடங்களில் நாங்கள் 1.86 சதவீத வாக்குகள் இடைவெளியில் தான் தோற்றோம். அதனால், அத்தொகுதிகளில் மறுபடியும் தீவிரகவனம் செலுத்தி ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிப்போம். ஒரு தேர்தலில் தோற்று விட்டதற்காக தேசியக்கட்சியான காங்கிரஸின் அத்தியாயம் முடிந்து விட்டதாக கருதக்கூடாது.

ஊழலுக்கு எதிராக அண்ணாஹசாரே நடத்திய போராட்ட இயக்கத்தால் தான் ஆம் ஆத்மி இந்த வெற்றியை பெற்றுள்ளது. அண்ணா ஹசாரேவின் ஆசி அக்கட்சிக்கு இருப்பதுபோன்ற தோற்றம் உருவானது. கவர்ச்சியான அதேநேரத்தில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஆம் ஆத்மிகட்சி ஏமாற்றியுள்ளது. அந்த கட்சி போட்டியில்லாமல் இருந்திருந்தால் பாஜக மிகச்சிறந்த வெற்றியை பெற்றிருக்கும். அந்த கட்சியைப்பற்றி நாங்கள் சரியாக கணிக்கவில்லை. ஆனால், இப்போது கணித்து வைத்துள்ளோம். மறுதேர்தலில் அக் கட்சியை தோற்கடிப்போம்.

ஆட்சி அமைப்பது குறித்து மக்கள்கருத்துகளை கேட்டு வரும் ஆம் ஆத்மிகட்சியின் நடவடிக்கை இந்திய ஜனநாயகத்துக்கே இழுக்கானது. மக்கள் அளித்த தீர்ப்பை அவர்கள் முதலில் மதிக்கவேண்டும். அதற்கேற்ப அவர்கள் உடனடியாக முடிவு எடுக்கவேண்டும் என்றார் ஹர்ஷவர்தன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...