பிரதமர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் அஞ்சுகிறது

 காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க அஞ்சுகிறது என்று எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசியுள்ளார். .

டில்லியில் நடக்கும் பாஜக., தேசியசெயற்குழு கூட்டத்தில் அரசியல் ரீதியான முக்கியதீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்துவரும் இறுதி நாள் கூட்டத்தில் பாஜக., தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் அத்வானி, பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் கூட்டத்தில் சுஷ்மா சுவராஜ் பேசியதாவது: சமீபத்திய 5 மாநில சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் பீதியில் உள்ளது. பாஜக., அறிவித்துள்ளபடி காங்கிரஸ் பிரதமர்வேட்பாளர் யார் என்று அறிவிக்க ஏன் அஞ்சுகிறது. பிரதமர் வேட்பாளர் அறிவிக்காமல் அஞ்சி ஓடுகிறது. காங்கிரஸ் , வெளிநாட்டு கொள்கையில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் பலர்மீது ஊழல் புகார் உள்ளன. இந்திய- பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய ராணுவவீரர்கள் தலை கொய்யப்பட்டது. நமது எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படும் போது மத்திய அரசு மவுனமாக இருந்துவருகிறது.

பாட்னாவில் நடந்த பாஜக, கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் வேதனையான சம்பவம். பாஜக., நிர்வாகிகளை காத்திட உரியபாதுகாப்பு அளிக்கப்படவில்லை. எங்கள் நிர்வாகிகள் யாரும் அஞ்சமாட்டோம். வரும் லோக்சபா தேர்தலில் பாஜக., அபாரவெற்றி பெறும்.

காங்கிரஸ் இந்நாட்டை கொள்ளையடித்து விட்டது. சோனியா பல்வேறுபணிகளை செய்ததாக கூறுகிறார். ஆனால் உண்மையில் இது நடக்கவில்லை. காங்கிரசுக்கு மக்கள் விரைவில் பாடம்புகட்டவுள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் மோடி குற்றமற்றவர் என நீதி மன்றம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ., 272 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதிக்கும்.இவ்வாறு சுஷ்மா பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...