மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய மாற்றம்

 மத்திய அமைச்சரவையில் விரைவில் மிகப் பெரிய மாற்றம் செய்யப்படும் என்றும், புதிதாக 5 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
.தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவையில் சிலஅமைச்சர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இலாக்காகளை வகித்து வருகிறார்கள். இதனால் கடந்த மே 26ம்தேதி மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றதில் இருந்து அமைச்சரவையில் மாற்றம்செய்யப்படும் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் மத்திய அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே சாலைவிபத்தில் மரணம் அடைந்தார். அவர் வகித்துவந்த ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் இலாகாவுக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதிதாக 5 அமைச்சர்களை நியமிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக் கூறப்படுகிறது.

மகராஷ்டிராவில் பிஜேபியை ஆதரித்து தேர்தல்பிரச்சாரம் செய்துவரும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நாக்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் விஜய தசமி உரை தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப் பட்டதில் சர்ச்சை ஏற்பட்டு இருப்பது பற்றி நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர் முந்தைய ஆட்சிக் காலத்தில் தூர்தர்ஷனுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை இப்போது நீக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். முந்தைய ஆட்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் உரையை ஒளிபரப்ப ஏன் அனுமதிக்கவில்லை. இதர தொலைக்காட்களில் அவரது உரை ஒளிபரப்பப் பட்டது. தற்போது டிடிக்கு எந்த கட்டுப்பாட்டையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த மாதம் 3-வது வாரம் அல்லது டிசம்பரில் மத்திய அமைச்சரவையில் பெரியளவில் மாற்றம் செய்யப்படும் .என்றார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை யொட்டி செய்யப்பட இருக்கும் இந்த மாற்றம் குறித்து மேற்கொண்டு தகவல்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.

கருப்புபணம் மீட்புகுறித்து கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் வழிகாட்டுதல்படி கருப்புபணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களை விரைவில் பொது மக்களுடன் பகிர்ந்துகொள்வோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...