முதலாம் ராஜேந்திர சோழன்

முதலாம் ராஜேந்திர சோழன்  இந்திய வரலாற்றில் வீரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனுக்கு நிகராக மாற்றொரு அரசனைக் கூற முடியாது. ஏறத்தாழ 1௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சிறந்ததொரு கடற்படையை நிறுவி, கடல் கடந்த நாடுகளை வென்று உலக சாதனை படைத்த மாமன்னனும் இவனே.

போர்க்களம் காணாத சோழநாடு, அமைதியான ஆட்சி, கொடுங்கோன்மை என்பதே இல்லாத மக்களாட்சி நெறியில் இயங்கிய ஊர்ச் சபைகள் இமயம் அளவு சாதனை படைத்த கவின்கலைகள், செல்வம் மிகுந்த நாடு என சோழ மண்டலத்தை கூருகின்றொரு பொற்காலத்தை உருவாக்கியவர் மாமன்னன் ராஜராஜன். அவனது சாதனைகளும் வீர வரலாற்றுக்கும் பின்புலத்தில் நிழலாய் விளங்கியவன் ராஜேந்திர சோழனே.

மாமன்னன் ராஜராஜன் காலத்தில் தற்போதைய ஆந்திரம், கர்நாடகம், கேரளம், இலங்கை, மேலைக்கடலில் திரியும் லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற பகுதிகளும் தமிழகம் முழுவதும் சோழப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளாகும். இவற்றை ராஜேந்திர சோழன் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருந்ததோடு கங்கைக்கரை வரை வடபுலத்தும், வங்கம் வரை வடகிழக்கும், மாராஷ்டிரா வரை வடமேற்கும் வென்றதோடு வங்கக்கடல் கடந்து கீழ்த்திசை நாடுகளான அந்தமான்-நிக்கோபார், மலாயா, சுமித்திரா, வரை பலநாடுகளைத் தன வீரத்தால் பணியவும் வைத்தான். இலங்கை முழுவதும் இவனது கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

"கங்கை கொண்ட சோழன்", "கடாரம் கொண்டான்" என்ற சிறப்புப் பட்டங்களைச் சூடினார். இவற்றை எல்லாம் சிறப்புறக் குறிக்கும் இவனது பட்டங்களைச் சூடினார். இவற்றை எல்லாம் சிறப்புறக் குறிக்கும் இவனது மெய்க்கீர்த்தி,"இடைத்துறை நாடும்,வனவாசயும், கொள்ளிப் பாக்கையும், மண்ணைக் கடக்கமும், பழந்தீவும், இரட்டபாடி எழ்கரை இலக்கமும், சக்கரக் கோட்டமும், மதுரை மண்டலமும், நாமணைக் கோணமும், பஞ்சப் பள்ளியும், தண்டபுத்தியும், தக்கண லாடமும், வங்காள தேசமும், உத்திர லாடமும், கங்கையையும்" வென்றதாகக் குறிப்பிடுகின்றது. இவையனைத்தும் இந்திய திருநாட்டின் பெரும் பகுதியாகும்.

இவை மட்டுமன்றி தென்திரை ஈழமண்டலம் முழுவதும் இவனால் கொள்ளப் பெற்றது என்பதையும், 'அலைகடல் நடுவுள் பல களம் செலுத்தி சங்கிராம விசையோதுங்க வர்மனாகிய கடாரத்து அரசனை வாகையும் பொருகடல் கும்பக்கரியோடு அகப்படுத்தி, உரிமையிற் பிறக்கிய பெருந்திப் பிறக்கமும் ஆர்த்தவன் அகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத் தோரணமும் உய்த்தொளிர்ப் புனை மனிப்புதவமும், கனமணிக்கதவமும் நிறை சீர் வசியமும் துறைநீர்ப் பண்ணையும் வண்மலையூர் எயிர் தொன்மலையூரும், ஆழ்கடல் அகழ் சூழ் மாயிரு டிங்கமும், கலங்கா வல்வினை இலங்கை சோகமும், காப்புறு நிறைபுனல் மாப்பப்பாளமும் காணலாம் புரிசை மேவு இலிம்பங்கமும் வினைப் பந்தூர் இடைவேளைப் பந்தூரும் கலைத் தக்கோர் புகழ்த் தலைத் தக்கோலமும் தீது அமர் பல்வினை மாதமாளிங்கமும் கலாமுதிர் கடுந்திறல் இலாமுரிதேசமும் தேங்காவர் பொழில் மானக்க வாரமும் தொடுகடல் காவல் கரடு முரட் கடாரமும் மாப்பெரு தண்டல் கொண்ட கோப்பரகேசரி வன்மர் ஸ்ரீ ராஜேந்திரசோழ தேவர்' என்று கடல் சார்ந்து அப்பெருமன்னன் வென்ற கீழ்த்திசை நாடுகளையும், அங்கு பெற்ற பொருள்களையும் பட்டியலிட்டுக் கூறுகின்றது அந்த மெய்க்கீர்த்தி. இது புனைந்துரையன்று. தமிழ்ப்பெருமன்னனின் வீரத்தை, நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு பட்டியலிடும் பாமாலை என்பதே உண்மை.

இவ்வாறு பாமாலையாகக் காணப்பெறும் கடல்சார்ந்த வெற்றிகளைக் குறிப்பிடும் மெய்க் கீர்த்தியடங்கிய கல்வெட்டுகள் ராஜேந்திர சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டிலிருந்துதான் கிடைக்கின்றன. இவன் கப்பற் படைகளை கடலில் செலுத்தி கடாரம் கொண்ட செய்தியை திருவாலங் காட்டுசெப்பேடும் கூறுகின்றது. அப்படையெடுப்பு கி.பி.1௦க்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும்.

இவ்வேந்தன் தன்னுடைய சிறந்த கடற்படையின் துணை கொண்டு கடல் நடுவிலுள்ள கடாரத்தரசனாகிய சங்கிராம விசோயத்துங் கவர்மனைப் போரில் புறங்கண்டு அவனது பட்டது யானையையும் பெரும் பொருளும் வித்யாதரத் தோரணத்தையும் கவர்ந்து கொண்டு ஸ்ரீ விசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்கா, சோகம், பப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம்,தாமலிங்கம், இலாமுர்தேசம், நக்கவாரம், கடாரம் ஆகிய இடங்களைக் கைப்பற்றினான் என்று அறிய முடிகிறது. இவை சுமத்திரா, மலேசியா, அந்தமான் பகுதிகளைச் சார்ந்த இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கம்போடியா என அழைக்கப்படும் காம்போஜ நாட்டின் மன்னன் ஒருவன் ராஜேந்திர சோழனுக்காக தன நாட்டிலிருந்து அழகிய தேர் ஒன்றை அனுப்பி தன் நட்பை வெளிப்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தன வீரத்தைக் காட்டி நிற்கும் பட்டப் பெயரான "கங்கை கொண்டான்" என்ற பெயரினை நினைவூட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை கொள்ளிடத்திற்கு அமைத்ததோடு, கங்கை கொண்ட சோழீச்சுரம் எனும் திருக்கோயிலையும் எடுப்பித்தான். வடபுலத்து அரசர்களைவென்று கங்கையிலிருந்து கொணர்ந்த புனிதநீரைத் தான் அந்நகரில் தோற்றுவித்த "சோழகங்கம்" எனும் ஏரியில் விடுத்து, தன் வெற்றிக்கு "ஜலஸ்தம்பம்" எடுத்தான். (பொதுவாக வெற்றியைக் கொண்டாட ஜெயஸ்தம்பம் (வெற்றிதூண்) நிறுவுவது வழக்கம். ஆனால் இப்பெருவேந்தன் ஜலஸ்தம்பம் எடுத்ததாக கல்வெட்டில் கூறிக் கொள்கிறான்.

ஒரு பேராசானுக்கு ஏன் இத்தகைய போர் வெறி என்று சிலர் நினைக்கலாம். அது தவறு. பல்லவர் காலத்து வரலாறு சோழர்களுக்கு புகட்டிய பாடமே போர்மேற்சொல்லும் நிர்வாக உத்தியாகும். சோழர்கள் எந்த நாட்டையும் பிடித்து கசக்கிப் பிழியவில்லை. அதனைத் தொடர்ந்த அடிமைபடுத்தவும் இல்லை.

ஒரு நாட்டில் போர்க்களம் காணாத ஒரு நிலை இருந்தாலன்றி அங்கு வளம் கொழிக்க முடியாது. கல்வி மேம்பட முடியாது. கவின் கலைகள் வளர்ச்சி அடைய முடியாது. இதை உணர்ந்த மாமன்னன் ராஜராஜனும், ராஜேந்திர சோழனும் தாங்கள் அரியணையில் அமர்ந்தவுடனே சோழ நாட்டை சுற்றியுள்ள நாடுகளுக்கெல்லாம் தூதர்களை அனுப்பி நட்புக்கரம் நீட்டினர். நட்புடன் இருந்தவர்களை அரவணைத்தார். நட்பு மறுத்தவர்களுடன் மோதினார். வெற்றி கண்டனர். அவர்கள் நாட்டில்,தாங்கள் நிலைப்படைகளை நிறுத்தி அவர்களால் எந்த நேரத்திலும் ஆபத்து வராத வண்ணம் கண்காணித்தனர். இந்த ஆளுகைத் திறத்தால்தான் சோழநாடு தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது, எல்ல வகையிலும் வளமோடு திகழ முடிந்தது.

ராஜராஜனின் பூர் வெற்றிகளுக்கு ராஜேந்திர சோழனும், ராஜேந்திர சோழனின் வெற்றிகளுக்கு ராஜாதிராஜனனும் காரணமாய் இருந்தனர். விஜயாலய சோழன் காலத்திலிருந்து ராஜராஜன் காலம் முடியும் வரை தஞ்சையே தலைநகரமாக இருந்தது. ராஜேந்திர சோழன் முதல் பத்தாண்டுகள் மட்டுமே தஞ்சையில் இருந்தான். பின்பு கங்கை கொண்ட சோழபுரத்திற்குத் தலைநகரை மாற்றினார். இதற்கு முக்கிய காரணம் படைத்தலைமையிடம் இருப்பதற்கு தஞ்சையின் நில அமைப்பு ஏற்புடையதன்று என்பதை ராஜேந்திரன் உணர்ந்தான்.

ஒவ்வொருமுறையும் பல்லாயிரக்கணக்கான யானைகளும், குதிரைகளும், தேர்களும், காலாட்படையும் மருத நிலப்பகுதியான தஞ்சையிலிரிந்து புறப்பட்டு வடபுலம் செல்ல வேண்டுமாயின் காவிரியின் அனைத்து கிளை நதிகளையும் கடக்க வேண்டும். சாலைகள் பழுதடையும், பசுமையான விலை நிலங்கள் பாழ்படும் இவற்றைத் தவிர்ப்பதற்கே கொள்ளிடத்தின் வடகரையை தேர்வு செய்தான். அதே நேரத்தில் வலமில்லாமல் இருந்த அந்தப் பகுதியில் பெரிய ஏரியை வெட்டுவித்து நீர்வலப்படுத்தி மேன்மையுறச் செய்தான். தலைநகர் மாற்றம், புதிய நகர நிர்மாணம் என்பதை அறிவுப் பூர்வமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் அவன் சிந்தித்து செயல்படுத்திய திட்டங்களாகும்.

பாண்டிய நாட்டை தன் ஆளுகைக்கு உட்படுத்தி ராஜேந்திர சோழன் அங்கு ஓர் அழகிய அரண்மனையை நிர்மானித்ததோடு தன் மைந்தன் ஒருவனை அப்பகுதியில் ஆட்சியாலனாகவே நியமித்தான். திருநெல்வேலி மாவட்டத்து அம்பாசமுத்திரத்தில் ஒரு நிலைப்படையை அமைத்து தென்பகுதியிலிருந்தும், கேரளா நாட்டிலிருந்தும் ஆபத்துகள் ஏற்படா வண்ணம் செய்தான். ஆறுகளை கடக்கும் போது தன் யானைப் படையின் யானைகளை ஆற்றின் நடுவே நிறுத்தி அவற்றின் முதுகின் மேலாகப் பாலம் அமையுமாறு செய்து படைகளை அக்கரை செலுத்தும் அவனது போர் நுட்பம் பற்றிய குறிப்புகளை கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் எடுத்துரைக்கின்றன. தமிழின்பாலும் தமிழசையின்பாலும் தணியாத தாகமுடையவனாகவே வாழ்ந்தான். 'பண்டிதசோழன்' என்ற சிறப்பு பெயரும் பெற்றான்.

ஒருமுறை பழையாறை அரண்மனையில் இப்பேரரசன் உணவு அருந்திக்கொண்டிருந்தான். அவ்வேளையில் அங்கு வந்த அவனது போர்த் தளபதி ராசராச பிரம்மாராயன் என்பவன் மன்னனிடம் ஒரு விண்ணப்பம் செய்தான். அந்த விண்ணப்பம் போர் பற்றியதோ அல்லது ஆட்சி பற்றியதோ அல்ல. திருக்கற்குடி (திருச்சிராப்பள்ளி உய்யகொண்டான் திருமலை) சிவாலயத்தில் மூவர் தேவாரம் பாடும் ஒதுவார்களுக்காக விண்ணப்பம் செய்தான். உணவு அருந்திக் கொண்ட காது கொடுத்துக் கேட்ட ராஜேந்திர சோழன் உளம் மகிழ்ந்து தமிழ்பாடும்

இசைவாணர்களுக்காக திருக்கற்குடியில் நிலமளித்து ஆணையிட்டான். அப்படியே கல்லிலும் எழுத சொன்னான். நிலம் அளித்தவனோ கங்கையும் கடாரமும் வென்ற சோழப்பேரரசன். தமிழ் பாடுபவர்களுக்காக விண்ணப்பித்த்வனோ பல போர்களைக் கண்ட சோழர் தளபதி. அது மட்டுமன்று அத்தலபதி பின்னாளில் மேலைச் சாளுக்கியரோடு நிகழ்ந்த போரில் வீர மரணம் அடைந்தான். அவனுக்காக கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜராஜ நரேந்திரன் அந்த இடத்திலேயே சமாதிக் கோயிலும் அமைத்திருக்கிறான். மன்னனும், தளபதியும் தமிழுக்காகவும் தெய்வத் தமிழிசைக்காகவும் காட்டிய ஈடுபைடைத்தான் இந்த வரலாறு ;நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. சமஷ்கிருததில் புலவோர் ஆய்வு மேற்கொள்ள எண்ணாயிரம் கிராமத்தில் பல்கழைகழகம் நிறுவியமை ராஜேந்திரனின் நெடு நோக்கைக் காட்டியது.

ராஜேந்திர சோழன், மற்ற சமயத்தவர்களிடமும் நேசமுடன் திகழ்ந்தான். நாகப்பட்டினதில் கடாரத்து அரசனால் எடுக்கப்பட்ட பௌத்த பள்ளிக்கு கொடையாக பல ஊர்களை ராஜராஜன் அளித்திருந்தான். அதற்கான செப்பேட்டுச் சாசனத்தை ராஜேந்திர சோழனே கடாரத்து அரசனுக்கு வழங்கினான் என்பது குறிப்பிடத்தகதாகும்.

தஞ்சைக்கருகில் உள்ள ஆர்க்காட்டுக் கூற்றத்தில் முதலாம் பராந்தக சோழன் ஒரு பாசன ஏரியை அமைத்து சோழநாட்டில் நீர்வளம் பெருக்கினான். இம்மன்னவன் தான் வீரநாராயனப்பேறேரி (வீராணம் ஏறி) யையும் அமைத்தவன். அந்த ஏரியின் பராமரிக்கும் பொறுப்பினை அமண் குடியிலிருந்த ஒரு சமணப் பள்ளியின் தலைவரிடம் ஒப்படைத்தான்.
பின்னாளில் அந்த ஏரியை ராஜேந்திர சோழனும் போற்றிப் பாதுகாத்தான். அதற்கென ராஜேந்திர சோழனின் தளபதி ஜெயமூரி நிலக்கொடை அளித்து அதன் வருவாயிலிருந்து ஏரியை மராமத்து செய்யும் பணியினை பராந்தக சோழன் செய்தது போலவே அதே சமணப்பல்லியிடம் ஒப்படைத்தான். இப்பெருவீரன் தான் இலங்கை முழுவதையும் ராஜேந்திர சோழனுக்காக வென்று வாகை சூடியவனாவான். இவ்வாறு மன்னனும், தளபதிகளும் பிறரும் மக்கள் நன்மைக்காக எண்ணற்ற தொண்டுகள் புரிந்திருக்கிறார்கள்.

தஞ்சையில் பிறந்து கங்கை கொண்ட சோழபுரத்தில் வாழ்ந்து, கடல் கடந்த வெற்றிகளைத் தழுவி பாரத் வரலாற்றில் தனியிடம் பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கி.பி.1௦44 ஆம் ஆண்டில் வடா ஆர்க்காடு மாவட்டம் பிரம்மதேசம் எனும் ஊரில் தங்கியருந்த போது மரணமடைந்தான். இதனை பிரம்மதேசம் கவ்வெட்டு ஒன்று எடுத்துரைக்கின்றது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்க ...

அமைச்சரவையில் மிஸ்ஸான தலைவர்கள் மோடி தலைமையிலான 3.o அமைச்சரவை பதவியேற்கும் நிலையில், இதில் ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முற ...

நரேந்திரமோடி பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...