நாட்டை சுத்தமாக்க, சுகாதாரமாக்க ரூ.2 லட்சம்கோடி

 நாட்டை சுத்தமாக, சுகாதாரமாக வைத்திருப் பதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம்கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நகர்ப் புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

ரோட்டரி கிளப் சார்பில் ' சென்னை கிண்டியில் நடந்த தூய்மை இந்தியா' உறுதியேற்பு நிகழ்ச்சியில் மத்திய நாடாளுமன்ற விவகாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய 'தூய்மை இந்தியா' திட்டத்தில் பாமர விவசாயிகள் முதல் நடிகர்கள் வரை பலரும் இணைந்து வருகின்றனர். ஒவ்வொரு இந்தியரும் இத்திட்டத்தில் பங்கேற்று, வாரத்துக்கு 2 மணி நேரம் என ஆண்டுக்கு 100 மணி நேரத்தை நாட்டின் தூய்மைப் பணிக்கு செலவிட வேண்டும்.

நகர்ப்புறங்களில் ஆண்டுக்கு 68.8 மில்லியன் டன் திடக்கழிவுகள் சேருகின்றன. இது 2041-ல் 160.5 டன்னாக உயரும் என்று கூறப்படுகிறது. நகர்ப்புறங்களில் மூன்றில் ஒரு பங்கு கழிவுகள் முறையாக மேலாண்மை செய்யப்படுவதில்லை. 27 மில்லியன் டன் குப்பைகள் நகரின் வெளிப்புறங்களில் நிலத்தில் கொட்டப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசுபடுகிறது. கிராமப்புறங்களில் ஒரு நாளுக்கு 0.4 மில்லியன் டன் அளவில் திடக்கழிவுகள் உற்பத்தியாகின்றன.

இந்தியாவில் 68 சதவீத கிராமங்கள் இன்னமும் கழிப்பிட வசதிகளை பெறாமல் உள்ளன. கிராமப்புறங்களில் வரும் 88 சதவீத நோய்களுக்கு சுத்தமின்மையே காரணம். சுத்தமின்மையால் ஏற்படும் பிரச்சினைகளுக்காக ஒருவர் மாதம் ரூ.6500 செலவழிக்க வேண்டியுள்ளது என்று உலக சுகாதார மையம் கூறுகிறது. இதை கருத்தில் கொண்டே, 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் அறிமுகப்படுத்தியுள்ளார். அரசியல் விடுதலையைவிட நாட்டின் சுகாதாரம்தான் முக்கியம் என்று சொன்ன காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளுக்குள் (2019 அக்டோபர் 2) இந்தியாவை தூய்மையான நாடாக்க வேண்டும்.

சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணிகளில் ஈடுபட மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 1.34 லட்சம் கோடி செலவில் கழிப்பறைகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் 11.11 கோடி கழிப்பறைகள் கட்டப்படும். அடுத்த 5 ஆண்டுக்குள் நாட்டின் 2.47 லட்ச கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.20 லட்சம் தரவுள்ளோம். இதுமட்டுமன்றி 1.04 கோடி வீடுகளில் கழிப்பறையும், 5.08 லட்சம் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளும் கட்டப்படவுள்ளன.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...