“தேசப்பந்து” சித்தரஞ்சன் தாஸ்

 பிறப்பும் இளமையும்
சித்தரஞ்சன் தாஸ் 1870-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார். பள்ளிப் படிப்பும் கல்லூரிப் படிப்பும் கல்கத்தாவிலேயே முறையாகக் கற்ற சித்தரஞ்சன் தாஸ், சட்டப் படிப்புக்காக இங்கிலாந்து சென்று, அதில் தேர்ச்சி பெற்றுப் பின்னர் 1890- ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். தாம் கற்ற கல்விக் கேற்ப, கல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

தேசப்பந்து
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியவுடன், சித்தரஞ்சன் தாஸ் தீவிரமாகப் போராட்டத்தில் பங்கேற்றார். மிகப் பெரும் வருவாய் தந்த வழக்கறிஞர் தொழிலை உதறித் தள்ளினார். மோதிலால் நேரு, பிரகாசம், பந்துலு போன்றோரும் தங்களின் வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு போராட்டத்தில் இறங்கினர்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொள்வதில் பேரார்வம் கொண்ட அவருக்கு வருவாய் பெரிதாகத் தெரியவில்லை மேலும் தமக்கிருந்த சொத்து முழுவதையும் ஒரு மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்காகவும், பெண்களுக்காக ஒரு மருத்துவமனை தொடங்குவதற்காகவும் செலவு செய்து தாம் எளிய வாழ்க்கையையே மேற்கொண்டார். இத்தகைய அறிய செயல்கள் காரணமாக அவர், 'தேசபந்து' என அழைக்கப் பெற்றார்.

சௌரி சௌரா
1922 பிப்ரவரி 5-ஆம் நாள் உத்தரப் பிரதேசம் சௌரிசௌரா என்ற இடத்தில் நடந்த வன்முறை நிகழ்ச்சியைப் பற்றி அறிந்த காந்தியடிகள், பிப்ரவரி 12- ஆம் நாள் காங்கிரசுச் செயற்குழுவைக் கூட்டினார். அதில் சட்ட மறுப்புப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதென்று முடிவு செய்யப்பட்டது. காந்தியடிகள் போராட்டத்தை நிறுத்தி வைத்து அதன் உயிர் நடியையே போக்கிவிட்டார் என்று பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிறையிலிருந்த தலைவர்கள் காந்தியடிகளின் செயலைக் கண்டு சீறினார்.

சித்தரஞ்சன் தாஸ், காந்தியடிகள் போராட்டத்தை நிறுத்தியதைப் பற்றிக் கேள்விப்பட்டு நிலைகுலைந்து போனார் அவர் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வந்ததால், 1922 ஆகஸ்டில் விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பரில் கயாவில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டிற்கு அவர் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1923-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றம் மற்றும் கவுன்சில்களுக்கான தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என காந்தியடிகள் மற்றும் இராஜாஜி போன்றோர் கூறியதை மோதிலால் நேரும், சித்தரஞ்சன் தாசும் ஏற்க மறுத்தனர்.

சுயராஜ்யக் கட்சி
1923 சனவரி 1- ஆம் நாள் மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அலகாபாத் நகரில் சுயராஜ்யக் கட்சி என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பில் சத்திய மூர்த்தியும் சேர்ந்து தீவிரமாக உழைத்தார். உடனே தாசு காங்கிரசுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். மோதிலால் நேருவும் காங்கிரசு செயலாளர் பதவியிலிருந்து விலகினார்.

காந்தியடிகள் தாசு ஒப்பந்தம்
தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக, சித்தரஞ்சன் தாஸ் தொடங்கிய சுயராச்சியக் கட்சி, நாளடைவில் காங்கிரசுடன் இணைந்தே செயல்பட்டது. காங்கிரசு தேச பந்து சித்தரஞ்சன் தாசின் கருத்துகளை ஏற்றுக் கொண்டது.

"நாம் சட்டசபைக்குப் போகாமலிருப்பதே நாட்டுக்கு நல்லது" என்று காந்தியடிகள் தெரிவித்தார். ஆக்கப் பணிகளின் மூலம் பொது மக்களோடு, தொடர்பு கொண்டு அவர்களை மற்றுமோர் ஒத்துழையாமை போராட்டத்துக்கு தயார் செய்ய வேண்டும் என்று அவர் கருதினார். ஆனாலும், சுயராச்சியக் கட்சியாளர் போக்குக்கு அவர் குறுக்கே நிற்க விரும்பவில்லை. பின்னர், சுயராச்சியக் கட்சி காங்கிரசின் ஓர் அங்கமாக இயங்கவும் அவர் ஒப்புக் கொண்டார். காந்தியடிகளுக்கும் தாசுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தங்களை, பெல்காம் காங்கிரசு (டிசம்பர் 1924) அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது"

வழக்கறிஞர் தொழிலைக் கூட விடுதலைப் போராட்டத்திற்காக உதறித் தள்ளிவிட்டு, சுயராஜ்ஜியக் கட்சி என்ற ஓர் அமைப்பை நிறுவி இடையில் காந்தியடிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போதும், பின்னர் காந்தியடிகளும் காங்கிரசும் தம் கருத்தை ஏற்கச் செய்து காங்கிரசுடன் இணைந்து செயல்பட்ட தேசபந்து 1924-ஆம் ஆண்டு கல்கத்தா மேயர் பொறுப்பேற்று பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தினார் என்பது நினைவில் கொள்ளத் தக்கதாகும்.

அரசியல் குரு
தேசபந்துவின் எளிமையும் ஒழுக்கமும் நேதாஜியைக் கவர்ந்ததால் அவரையே தனது குருவாக சுபாஷ் சந்திர போஸ் ஏற்றார்.

அவரிடம் இரண்டு வருடங்கள் சுபாசு பயிற்சி பெற்றார். மக்களுக்கு தேசிய உணர்ச்சியை ஊட்டும் பொருட்டு "பார்வோர்டு" என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். இவ்விரண்டிலும் சுபாசு பணியாற்றினார்.

தேசபந்து 1925-ஆம் ஆண்டு சூன் 16-ஆம் தேதி இயற்கை எய்தினார்.
மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்யும் பொருட்டு அயராது கொள்கை முழக்கம் செய்த வீர மறவர்களை நினைத்து போற்றுவது நம் கடமை அல்லவா?

நன்றி : செல்வி சிவகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...