ராம நவமியை முன்னிட்டு பந்த் தேதியை மாற்றி அமைத்திட வேண்டும்

 இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி நதியின் குறுக்கே புதிய அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக விவசாயிகளின் கூட்டமைப்பு 28ம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் அறிவித்திருக்கிறது. பந்த் அறிவித்த தினத் தன்று ராம நவமி வருவதால், அந்த தேதியை 29ம் தேதிக்கு மாற்றி அமைத்திட இந்து முன்னணிக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு செய்தால் அனைவரும் இதில் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும். தமிழக விவசாய உற்பத்தியில் காவிரி நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது.

காவிரியில் நமது உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த கடையடைப்பை வரவேற்கிறோம். மாநில மக்களின் உணர்வுகளை வெளிப் படுத்திட கடையடைப்பு நடத்தும்போது எல்லோருடைய ஆதரவைப்பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்ததேதியை மாற்றி அமைத்திட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. ராம நவமி தமிழகம் முழுவதும் உள்ள ஆலயங்களில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து விவசாய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புரிந்துகொண்டு, போராட்ட தேதியை மாற்றி அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...