முஸ்லிம்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு

 முஸ்லிம்களுக்கு எனது முழு ஆதரவுஉண்டு'' என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். தில்லியில் தன்னை திங்கள் கிழமை நேரில் சந்தித்த முஸ்லிம் மதத் தலைவர்களிடம் இந்த உறுதியை பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்க பட்டிருப்பதாவது:

தில்லியில் பிரதமரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த முஸ்லிம் மதத்தலைவர்கள் கொண்டகுழு சந்தித்தது. மோடியுடனான சந்திப்பின் போது, முஸ்லிம் தலைவர்கள் தங்களது மதத்தினர் சந்திக்கும் பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்.

அவர்களிடம், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்துபிரிவினரும் சந்திக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண்பதற்கு தனது முழு ஆதரவு உண்டு என பிரதமர் உறுதியளித்தார். தேசத்தை கட்டமைக்கும் பணியில், முஸ்லிம் இளைஞர்கள் முக்கியப்பங்காற்ற வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

மதரஸாக்கள், மசூதிகள், வழிபாட்டு தலங்களின் சொத்துகள் தொடர்பான பிரச்னைகள்குறித்து பிரதமரின் கவனத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் எடுத்துச் சென்றனர்.

அதற்கு பிரதமர் பதிலளிக்கையில், அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். முஸ்லிம் மதத்தைச்சேர்ந்த இளைய தலைமுறையினருக்கு கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான வசதி செய்துதருவதற்கு அரசின் ஆதரவை பிரதமரிடம் முஸ்லிம் தலைவர்கள் கேட்டனர். அதற்கு, முஸ்லிம் மக்களின் சமூக பிரச்னைகளை சீர்செய்வதற்கும், அவர்களின் கல்வி தேவைகளை பூர்த்திசெய்வதற்கும் முழு உதவி செய்துதரப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

அதிகரிக்கும் அடிப்படை வாதம், பயங்கர வாதத்தால் எழுந்துள்ள அச்சுறுத்தலால் மக்களிடையே அச்சம் எழுந்திருப்பதாகவும், அந்தசவாலை முறியடிப்பதற்கு சிறப்பான ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் இஸ்லாமிய தலைவர்கள் குறிப்பிட்டனர். நாடு விரைவாக வளர்ச்சியடையவும், சமூக நல்லிணக்கம், அமைதியை ஊக்குவிக்கவும், நாட்டின் பாதுகாப்பை பலப் படுத்தவும் பிரதமர் மோடி கொண்டுள்ள குறிக்கோள்களை அடைவதற்கு முஸ்லிம் மக்கள் முழுஆதரவு அளிப்பார்கள் என்று தலைவர்கள் தெரிவித்தனர் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...