எல்லை பிரச்சனை இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள சீனா விரும்பம்

 எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்கள் நடந்துக்கொள்ளும் முறைதொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள சீனா விரும்பம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி ஊடுருவி வருகிறது. இதைப்போல பாகிஸ்தான் ராணுவம் கடந்த சிலநாட்களாக காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் இந்த நாடுகளுடன் தொடர்ந்து எல்லைப் பிரச்சினை நீடித்துவருகிறது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங் காலமாக எல்லைப்பிரச்சினை இருந்துவருகிறது. குறிப்பாக, இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசம், தனது தன்னாட்சி பகுதியான தெற்குதிபெத்தின் ஒருபகுதி என்று சீனா கூறுகிறது. ஆனால் அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதேபோன்று அந்த பகுதியில் உள்ள 'மக்மோகன்கோடு' தொடர்பாகவும் சீனா பிரச்சினை செய்துவருகிறது.

இருதரப்பிலும் 18 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், எல்லைப்பிரச்சினை தொடர்கதையாக நீளுகிறது.

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்தமாதம் சீனா பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியா – சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு தெளிவு படுத்தப்பட வேண்டும் என்று சீனாவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஆனால் சீன பிரதமர் மோடியின் வலியுறுத்தலுக்கு மாறாக எல்லையில் இருதரப்பு ராணுவவீரர்கள் நடந்துக் கொள்ளும் முறைதொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்பம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியின்வலியுறுத்தலுக்கு கிடைத்த சீனாவிடம் இருந்து கிடைத்த முதல்பதில் இதுவாகும். சீன வெளியுறவுத் துறையின் ஆசிய நாடுகள் விவகாரங்கள் துறை துணை பொது இயக்குநர் ஜிலியன், "உண்மையான கட்டுப்பாட்டு கோடு விவகாரத்தில் கடந்த காலங்களில் சங்கடங்கள் ஏற்பட்டது, இதில் தெளிவான நிலையை அடையும்முயற்சியாக இந்தியா-சீனா முதலில் எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்கள் நடந்துக்கொள்ளும் முறைதொடர்பாக ஒப்பந்தத்திற்கு முன்வரவேண்டும்." என்று தெரிவித்து உள்ளார்.

"எல்லையில் நாம் என்ன செய்தாலும் அது ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும். இதனுடைய அர்த்தம் என்னவென்றால், உருவாக்கப்படும் தடுப்பானது பேச்சுவார்த்தை நடத்தக்கூடியதாகவும் இருக்கவேண்டும், தடுமாற்றமாக இருக்க கூடாது," புதிய உடன்பாட்டை உருவாக்குவதன் மூலம், உண்மையான கட்டுப்பாட்டு கோடு விவகாரம் தொடர்பாக தெளிவானநிலையை கண்டுக்கொண்டால், அதன்படி முன்னோக்கி செல்லலாம். ஆனால் உடன்பாட்டில் இடையூறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது நிலமையை மோசமாக்கும். இதனை மிகவும் கவனமாக கையாளவேண்டும். என்று ஜிலியன் செய்தியாளர் சந்திப்பில் பேசிஉள்ளார்.

"எங்களுடைய நிலையின்படி நாங்கள் விரிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம், கட்டுபாடு தொர்பாக மட்டுமின்றி, எல்லையில் அமைதி உறுதியை நிர்வகிக்கவும் நடவடிக்கை இருக்கவேண்டும். எல்லையில் இருதரப்பு ராணுவ வீரர்கள் நடந்துக்கொள்ளும் முறைதொடர்பாக இருநாடுகளும் ஒப்பந்தத்திற்கு முன்வர முயற்சிசெய்ய வேண்டும்." என்று கூறிஉள்ளார். இருநாடுகளும் இதுவரையில் சிலநேரங்களில் ஆய்வுசெய்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஒருஎண்ணம் மட்டும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நாம் செய்வதற்கு பல்வேறு எண்ணங்கள் உள்ளது. இதில் நாம் விரிவானபோக்கை நாடவேண்டும். என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

உண்மையான எல்லை கட்டுப்பாடுதொடர்பாக பிரதமர் மோடியின் வலியுறுத்தல் விவகாரத்தில் சீனாவின் பின்வாங்கல் தொடர்பாக விளக்கம் அளித்து உள்ள ஜிலியன், நாங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக தெளிவுபடுத்த முயற்சி செய்தோம். ஆனால் சங்கடங்களிலே முடிந்தது. இதுமோசமான சூழ்நிலைக்கே வழிவகை செய்தது. எனவே இவ்விவகாரம் தொடர்பாக நாம் என்ன செய்தாலும், எல்லையில் அமைதிக்கு உகந்த நல்லவிஷயங்களாக இருக்கவேண்டும். சங்கடங்களை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...