ரூ.1,786 கோடி செலவில் ‘டிஜிட்டல் நூலகம்’

 நீதி மன்றங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் (இ-கோர்ட்), ரூ.1,786 கோடி செலவில் நாடுமுழுவதும் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும் என்று மத்திய சட்டதுறை அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்தார்.

பொது நல வழக்கு குறித்த கொள்கை, நீதி, சுற்றுச்சூழல் சட்டங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக வழக்கறிஞர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் இணைந்து நடத்திய இந்த மாநாட்டை மத்தியசட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் டி.வி.சதானந்தா கவுடா தொடங்கிவைத்து பேசிய தாவது:

பொதுநல வழக்கு குறித்த கொள்கை ஏற்கெனவே தயாரிக்கப் பட்டு தயார்நிலையில் உள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும். தேவையில்லாமல் பொதுநல வழக்குகள் தொடுக்கப்படுவதை தடுக்கும் வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பணச்செலவு காரணமாக பெரும் பாலான ஏழை மக்களால் நீதி மன்றத்தை அணுக முடியவில்லை என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. வழக்குகளில் பெரிய வழக்கறிஞர்களை வாதாட வைப்பது என்பது மேல், நடுத்தர வர்க்கத்தினருக்கே சிரமமாக உள்ள நிலையில், ஏழை மக் களின் நிலை மிகவும் பரிதாபத்துக் குரியது. ஏழைகள் உட்பட அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தை நாடும் வகையில் என்ன செய்யலாம் என்பது குறித்து வழக்கறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

தற்போது நாடு முழுவதும் நீதிமன்றங்களில் சுமார் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளுக்கு குறிப்பிட்ட காலத் துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். வழக்குகளின் தேக்க நிலையை தவிர்க்க மாற்று தீர்வு முறைகளை (சமரசம், லோக் அதாலத், மத்தியஸ்தம்) ஊக்குவிக்க வேண் டும். இதன்மூலம், தேங்கிக்கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும்.

மத்திய சட்ட அமைச்சர் உயர் நீதிமன்றங்களை பார்வை யிடுவதுபோல் கீழ்நிலை நீதிமன்றங் களையும் பார்வையிட்டால் அங் குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நேரடியாக அறிந்து கொள்ள முடியும் என்று இந்தக் கூட்டத்தில் எனக்கு யோசனை தெரிவித்தனர். அருமையான இந்த யோசனையை பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

நீதிமன்றங்களை நவீனமயமாக் கும் இ-கோர்ட் திட்டத்தின் முத லாவது கட்டம் முடிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ.1,786 கோடி செலவில் நாடு முழுவதும் அனைத்து நீதி மன்றங்களிலும் 'டிஜிட்டல் நூலகம்' ஏற்படுத்தப்படும். இதன்மூலம் நீதித் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள், பல்வேறு வழக்குகளில் வழங் கப்பட்ட தீர்ப்பு நகல்களை பெற முடியும்.

இவ்வாறு அமைச்சர் சதானந்தா கவுடா கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...