அவசர அவசரமாக அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதில் , கூட்டணி கட்சியினர் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் விருப்பம் இல்லாமல் சசிகலா குடும்பத்தினரின் விருப்பத்துக்கு இணங்க வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .
இது பற்றி விசாரித்த போது, கூட்டணி கட்சி தொகுதி தவிர,
மற்ற இடங்களுக்கான பட்டியலை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டார்; விருப்ப மனுதாக்கல் மற்றும் புகார்கள் அடிப்படையில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளகளை மாற்றம் செய்தாலும் , இறுதி பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தியடைந்தார் என, தெரிகிறது . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் பெயர் இடம் பெற்றிருந்தது . இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் சற்று முன்பாக , கவனித்த ஜெயலலிதா பலரது தொகுதி மற்றும் பெயர் மாறியிருப்பது தொடர்பாக அதிர்ச்சி அடைந்தார். மிகக்கோபமாக இது பற்றி ஜெயலலிதா கேட்டபோது, சாக்கு போக்கு கூரப்பட்டது பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவரது சகாக்கள் பிடிவாதம் பிடித்துள்ளனர். ஒரு கட்டத்தில், கோபமாக சென்றுவிட்டதாக தெரிகிறது அதைதொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை.
தற்போது வெளியாகி இருக்கும் பட்டியல், சசிகலாவின் குடும்பத்தை பலப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அதிமுக,வினரே கருதுகின்றனர். பட்டியலும், தொகுதியும் மாற்றப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதனிடையே கூட்டணி கட்சிகளின் அதிருப்தியும், ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.