நாட்டில் மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு தற்போது மின் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உள்கட்டமைப்பு துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகுறித்து அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக் கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மின்சாரம், நிலக்கரி, துறை முகங்கள் ஆகிய துறைகள் குறித்தும், டிஜிட்டல் இந்தியாதிட்டம் குறித்தும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்தாலோசித்தார்.
அப்போது, பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இது வரை 1,371 செல்லிடப் பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் வசதி இல்லாத 18,500 கிராமங்களில் 6,000 கிராமங்களுக்கு மின் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள கிராமங்களுக்கு விரைவில் மின் வசதி செய்துதரப்படும் என்றும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம், 39.5 ஜிகாபைட் மின் உற்பத்தி எட்டப்பட்டு விட்டதாகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாபைட் மின் உற்பத்தி செய்யப்படும் எனவும் இக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
"அனைவருக்கும் இல்லம்' திட்டம்குறித்து ஆலோசனை நடைபெற்ற போது, திட்டத்தை துரிதமாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.