ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக டில்லியில், 150 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
டில்லியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு, ஜண்டேவாலா பகுதியின் கேசவ் கஞ்சில் புதிய அலுவலகம் கட்டுவதற்காக 2016ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நீடித்த, கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த அலுவலகம், 4 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் செலவில், தலா 12 மாடிகளைக் கொண்ட மூன்று பிரமாண்ட கட்டடங்களுடன் அமைந்துஉள்ளது.
சாதனா, அர்ச்சனா, பிரேரனா என அவற்றுக்கு பெயரிடப்பட்டுள்ளன.
சாதனா கட்டடம், நிர்வாக அலுவலகமாக செயல்படும். அதன் 10வது மாடியில் அதிநவீன வசதிகளுடன் நுாலகம் உள்ளது.
இந்த புதிய அலுவலகத்தில் மொத்தம் 300 அறைகள்; 1,300 பேர் அமரும் வகையில் மூன்று அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் ஒன்றுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் அசோக் சிங்காலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வளாகத்தில் மையமாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தோற்றுவித்த கேசவ் பாலிராம் ஹெட்கேவரின் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. நாடு முழுதும் இருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் தங்கும் வசதி உள்ளிட்டவற்றுக்காக அர்ச்சனா, பிரேரனா கட்டடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வளாகத்தினுள் அனுமன் கோவில், மருத்துவமனை அமைந்துள்ளன. 270 கார்களை நிறுத்தும் வகையிலான பார்க்கிங், 20 சதவீதம் சூரிய மின் சக்தியை பயன்படுத்தும் வசதி என ஏராளமான வசதிகளுடன் அமைந்துள்ள இந்த வளாகத்தில், தினமும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கூட்டம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பா.ஜ., தலைமை அலுவலகம், வி.எச்.பி., அலுவலகம் போன்றவற்றை வடிவமைத்த குஜராத்தை சேர்ந்த அனுப் தேவ் என்பவர் தான், இதையும் வடிவமைத்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 75,000 பேரிடம் இருந்து 5 ரூபாய் முதல் லட்சங்கள் வரை பெற்ற நன்கொடையில், புதிய அலுவலகத்தை கட்டியதாக ஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம், வரும் 19ல் திறக்கப்பட உள்ளது.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |