அதிகரித்து வரும் மின்தேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும்

வெப்பநிலையால் அதிகரித்துவரும் மின் தேவையை பூர்த்திசெய்ய அதிகளவில் நிலக்கரியை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறினார்.

என்.எல்.சி. இண்டியா லிமிடெட் நிறுவனத்தில் (நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்) சுரங்கப் பணிகளை ஆய்வு செய்தபின்னர் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிகரித்து வரும் மின்தேவையால் நாட்டின் பொருளாதாரம் உயரும். பிரதமரின் உஜாலா திட்டத்தின்கீழ் மக்களுக்கு இதுவரை 36.79 கோடி எல்.இ.டி மின்விளக்குகள் விநியோகம் செய்யப்பட்டதன் விளைவாக மின்நுகர்வின் அளவு கணிசமாககுறைந்துள்ளது.

எனினும் அதிக வெப்பநிலையால் கடந்த சிலமாதங்களாக மின்நுகர்வு அதிகரித்துவருகிறது. இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்துவருகிறது.

2040-ம் ஆண்டில் எதிர்பார்க்கபடும் மின்உற்பத்தி, சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும் அதேவேளையில், இந்தியாவின் எரிசக்திதேவை இரண்டு மடங்காக இருக்கும். இந்த தேவையைபூர்த்தி செய்ய, 2040-க்குள், அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக்டன்னாக அதிகரிக்கும்.

கடந்த 8 ஆண்டுகளில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின், மின் உற்பத்தித்திறன், 2740 மெகாவாட்டிலிருந்து 6061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கபட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னிலிருந்து 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தபட்டுள்ளது.

என்எல்சிஐஎல், அதன் உற்பத்தித்த்திறனில் 45 சதவீதத்திற்கும் மேலான, அனல் மின்சக்தி மற்றும் அதன் முழுமரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...