பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-
தமிழகத்தில் 35 லட்சம் போலிவாக்காளர்கள் இருந்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால் அவர்களில் 7 லட்சம் பேரை தான் தேர்தல்கமிஷன் நீக்கி உள்ளது. அதேநேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் போலியாக வாக்காளர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களையும் நீக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை. இல்லையெல் எங்கெங்கு அதிகமாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்களோ அந்த இடங்களில் ஓட்டுப் பதிவின்போது தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சிசெய்த அதிமுக. மற்றும் திமுக. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக புதிய எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும். தமிழகத்தில் ஆண்ட மற்றும் ஆளுகிற கட்சிகளுக்கு உதவியளிக்கும் வகையில் தனித்து நிற்போம் என்று சொல்பவர்களை பற்றி நான் கருத்து சொல்லவில்லை.
எனவே ஊழலற்ற, மது இல்லா, வளர்ச்சியை நோக்கமாககொண்ட ஆட்சி அமைக்க விரும்புபவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரவேண்டும். இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். தோழமை கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் வலுவான கூட்டணி அமையும்.
இதற்குமுன்பு மதிமுக. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்திருந்தன. அப்போது அவர்கள் எந்த கொள்கையுடன் கூட்டணி வைத்திருந்தனர். அப்போதைக்கு அப்போது உள்ள அரசியல்தேவை என்னவோ அதற்கு தகுந்தாற் போன்று தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. எனவே கொள்கை ஒத்துப் போகாததால் கூட்டணி வைக்கவில்லை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.