நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, திட்டமிட்ட உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும்.
அப்படி செய்தால்,
இரத்தத்தில் சர்க்கரையை ஒரே சீரான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும்.
இரத்தத்தில் கொழுப்பின் அளவை – (கொலஷ்ட்ராலின் அளவைக்) கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்.
உடல் எடை கூடாமல்-(பருமனாக ஆகி விடாமல்) வைத்துக் கொள்ள முடியும்.
இவற்றின் காரணமாக, நீரிழிவுநோயால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தடுக்க முடியும்.
தவிர்க்க வேண்டியன
நீரிழிவுநோய் உள்ளவர்கள் முக்கியமாகத் தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
கொழுப்பு உணவுகள்
உணவில் எண்ணெய் சேர்த்துக் கொள்வது.
சர்க்கரை-இனிப்பு வகைகள்.
மது அருந்துவது.
மாமிச உணவுகள் குறிப்பாக பன்றி, மாடுகளின் இறைச்சி உணவுகள்.
எண்ணெய்யில் பொறித்த, வறுத்த உணவு வகைகள்
காரட், பீட்ரூட், வாழைப்பழம், உருளைக்கிழங்கு ஆகியன
சேர்த்துக் கொள்ள வேண்டியன.
நாள்தோறும் பச்சைக் காய்கறிகளை நிரம்பச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உணவில் நார்ச்சத்துள்ளவை, கொட்டை வகைகள் போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மீன் வகைகளில் புரதச்சத்து (புரோட்டீன்) அதிகம் இருக்கிறது. எனவே மீன் வகைகளை வறுத்து, பொரித்து அல்லது வேறு வடிவில் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது சர்க்கரையின் அளவு இரத்தத்தில் குறைகிறது.
சிக்கன் எனப்படும் கோழிக்கறியும் இதைப் போன்றே பயன் தருவதாக உள்ளது.
இவற்றைப் பயன்படுத்தும் வேளைகளில், இவற்றில் பயன்படுத்தும் எண்ணெயைப் போதுமான அளவு அல்லது குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்.
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.