டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக சம்பவத்தில் அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியவர் யார்? என்பது விஷயம் கிடையாது, அந்நிகழ்ச்சியை நடத்தியதே தேசத்திற்கு எதிரானதுதான் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
இதுகுறித்து அமித் ஷா பேசியதாவது:-
பிப்ரவரி 9-ம் தேதி இந்தியாவின் சுதந்திரம் அல்லது குடியரசு தினமா? அன்று நடந்தது என்ன? பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளியான தீவிரவாதி அப்சல்குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கில்போடப்பட்ட நாள். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்ததே தேசத்திற்கு எதிரானது.
பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் அரசுக்கு எதிரான அறிக்கைகளை நாங்கள் சகித்து கொள்வோம், ஆனால் நாட்டிற்கு எதிரானதை சகித்து கொள்ள மாட்டோம்.
பாரத மாத வாழ்க முழக்கம் தொடர்பானவிவாதம் என்பது அர்த்தமற்றது என்பதை நான் ஒப்பு கொள்கின்றேன். ஆனால், நான் ஒன்றை கோடிட்டுகாட்ட வேண்டும். இந்த கோஷமானது பாரதிய ஜனதா மற்றும் அர்.எஸ்.எஸ். அமைப்பை விட பழமையானது. சுதந்திரம்பெற்று பல ஆண்டுகள் ஆன பின்னர் இன்னும் தேசத்தின் முழக்கம் குறித்து விவாதம் நடத்திக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.