மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே

மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால முதலமைச்சர்ஏக்நாத் ஷண்டே தெரிவித்துள்ளார் . மகாராஷ்டிராவில்மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் முதலமைச்சராக யார் பதவி ஏற்பார்கள்என்பதில் குழப்பம் நீடிக்கிறது. தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீண்டும் முதலமைச்சர்ஆக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வலியுறுத்துகின்றனர்.ஆனால், பாஜக தரப்பில் தேவேந்திரபட்நாவிஸைமுதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தமது இல்லத்தில்செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “பிரதமர் நரேந்திர மோடியிடம் நேற்று போனில் பேசினேன். நான் ஒரு தடையாக இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளேன். மகாயுதி அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நீங்கள் (பிரதமர்) முடிவு எடுங்கள். அதுவே எங்களுக்கு இறுதியான முடிவாகஇருக்கும். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மகாயுதிஅரசு மேற்கொண்ட பணிகள் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே நான் திருப்தியாக உள்ளேன்.

நான் ஒரு பொதுவான மனிதன். எனவே பொதுமான மனிதர்களை சந்திக்கும்போது அங்கு தடை ஏதும் இருக்காது. நான் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், பொதுமக்களின் பாதிப்புகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உள்ளேன். நாங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவைப் பெற்றுள்ளோம். எங்கள் திட்டங்களுக்கு ஆதரவு அளித்த பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றியாகும். நாங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்காமல் ஓய்வின்றி உழைத்தோம். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை மகாராஷ்டிரா மக்களுக்காக உழைப்பேன். இளைஞர்களுக்கு வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகின்றேன். மகாயுதி கூட்டணி தலைவர்கள் புதுடெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இறுதி முடிவு எடுக்கப்படும்,” என்றார். ஏக்நாத் ஷிண்டே இவ்வாறு வெளிப்படையாக கூறியதன் அடிப்படையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேர்வில் சிக்கல் இருக்காது என்று பாஜக மேலிடம் கருதுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...