ராமேஸ்வரம் மீனவர்கள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவை சந்தித்து பேசினர்.இதன்பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மீனவர் கொல்லப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்த சுஷ்மா, இரங்கல் தெரிவித்தார். கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கும், காயமடைந்த மீனவர் குடும்பத்திற்கும் நிவாரணம்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அதிபர் சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது. சுடக்கூடாது என்பது ஒப்பந்தம். இதைமீறி துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது கவலைதரும் விஷயம். துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா உறுதியளித்துள்ளார்.
ஆழ்கடல் மீன்பிடிக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருகின்றன. இதற்கான, ரூ.1,500 கோடி திட்டத்தை மத்தியஅரசு வகுத்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் ரூ.750 கோடி, மாநில அரசுசார்பில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கான பயிற்சி துவங்கியுள்ளது. இதற்கு காலஅவகாசம் வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனவர் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷ்மா கூறியுள்ளார். வரும் மே மாதம் பிரதமர் இலங்கைசெல்ல உள்ளார். அதற்குமுன்னர் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.