மோடியின் பயணத்தை தொடர்ந்து மீனவர்களை விடுவித்தது இலங்கை

இலங்கை சென்றிருந்த நம் பிரதமர் நரேந்திர மோடி, ‘மீனவர் பிரச்னையில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதுடன், படகுகளையும் விடுவிக்க வேண்டும்’ என, வலியுறுத்தியதை ஏற்று, சிறப்பு நிகழ்வாக, 11 மீனவர்களை விடுவிப்பதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக, நம் அண்டை நாடான இலங்கைக்கு சென்றார். பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகேவை சந்தித்து பேசினார்.

அப்போது, இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்னை தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. அதிகாரப் பகிர்வு அளிக்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 13வது பிரிவை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

இதைத் தவிர, மீனவர் பிரச்னை குறித்தும் மோடி ஆலோசனை நடத்தினார். ‘மீனவர்கள் பிரச்னை குறித்தும், அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் விவாதித்தோம். இந்த விஷயத்தில் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது’ என, சந்திப்புக்குப் பின் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தியதாக மோடி தெரிவித்தார்.

மூன்று நாள் பயணத்தை முடித்து, மோடி நேற்று அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே, இலங்கை அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது.

சிறப்பு நிகழ்வாக, 11 மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு நேற்று அறிவித்துள்ளது.

பயணத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி, வடமத்திய இலங்கையின் அனுராதபுரத்துக்கு மோடி சென்றார். திசநாயகேவும் உடன் சென்றார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மோடி துவக்கி வைத்தார்.

மேலும் அங்குள்ள புத்த மத தலமான ஸ்ரீ மகா போதி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...