நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய குளுமை. வெப்பம் அதிகரித்தால் கொப்புளம், கட்டி, தலைவலி,வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, ஒவ்வாமை,வயிற்றுப்போக்கு வரும். குளுமை தரக்கூடிய பழச்சாறு அருந்தினால் இத்தகைய உபாதைகளில் இருந்து விடுபட முடியும். குளுமை தரக்கூடியவை எலுமிச்சை, பப்பாளி, தக்காளி ஆகியவை.
சரீரத்தில் குளுமை அதிகரித்தால் பல்வலி, ஈறுவலி, மார்புச்சளி, தாழ் இரத்த அழுத்தம், காதுவலி, இருமல், ஜலதோஷம், பலவீனம், சோர்வு போன்ற உபாதைகள் ஏற்படும். வெப்பத்தை தரக்கூடிய பானங்களை – பழச்சாற்றை அருந்தினால் உபாதைகள் தீரும். ஆரஞ்சுப்பழத்தில் வெப்பத்தை உண்டுபண்ணும் சக்தி உண்டு.
எல்லாப் பழங்களும் இரத்த விருத்திக்கும், இரத்த சுத்திக்கும் உதவும் என்றாலும் உடம்பில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற இரண்டு பழங்களால் மட்டுமே முடியும். அவை எலுமிச்சையும், அன்னாசியும் ஆகும்.
காலையில் ஒரு கோப்பை எலுமிச்சைசாறு அருந்தினால் குடல் பகுதிகள் சுத்தமாகும். அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட முடியும். ஆரோக்கியப் பராமரிப்பின் இரகசியம் இது.
நச்சுத்தன்மை தான் நோய்கள் தோன்ற முக்கியக் காரணம். நோய்கள் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையை அகற்ற வேண்டும். இது பழச்சாறு அருந்துவதன் மூலம் சாத்தியப்படும்.
நன்றி : நரேந்திரன்
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.