சுமார் 70 நாட்களுக்கு மேலாக இந்திய சீன பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவமும் சீன ராணுவமும் முறித்துக்கொண்டு நின்றதை பார்த்து உலகமே இந்திய சீனப்போரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது. ஆனா ல் போர் இல்லாமலே இரு நாட்டு படைகளும் டோக் லாமை விட்டு விலக முடிவெடுத்துள்ளது.
சீனா பூடான் எல்லைக்குள் ரோடு போட மாட்டோம் என்று உறுதி அளிக்கப்பட்டதன் காரணமாக இந்திய
ராணுவம் படைகளை வாபஸ் வாங்க முடிவெடுத்து ள் ளது. இது தான் இந்தியாவின் குறிக்கோள் அதுவே நிறை வேறிவிட்டது..சத்தமின்றி ரத்தமின்றி போரின் றி மோடி சாதித்த சாதனை இது..இந்திய மீடியாக்கள் மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என் று சொல்கிறார்கள்
டோக்லாம் பிரச்சனை வந்தவுடன் தமிழ்நாட்டு தற் குறிகளும் மோடி எதிர்ப்பாளர்களும் ஆகா சிக்கிட்டா ர்டா மோடி சீனா இந்தியா மீது படையெடுத்து வந்து இந்தியாவை தோற்கடிக்கும்.இதனால் இந்தியாவில் எழும் உள் நாட்டு பிரச்சனைகளால் மோடி பதவி விலகுவார் என்று காத்திருந்தார்கள்.
ஆனால் நாங்கள் இப்போதய சூழலில் இந்தியா சீனா வைக்கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை போர் வந்தாலும் சீனாவை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது என்று எழுதினோம் .இதற்கு முக்கிய காரணம் சீனாவை சுற்றியுள்ள வியட்னாம் ஜப்பான் போன்ற நாடுகளோடு மோடி அரசு ஏற்படுத் தியுள்ள ராணுவ ஒப்பந்தங்கள் அமெரிக்காவோடு இந்தியா உருவாக்கியுள்ள ராணுவ கூட்டாளி அந்த ஸ்து ஆகியவற்றால் இந்தியாவின் பலம் சீனாவை விட பெருகியுள்ளது
இதற்கு வலு சேர்க்கும் வகையில் கோரா வலைதள த்தில் இந்தியா சீனாவை தோற்கடிக்க முடியுமா? என்கிற கேள்விக்கு சீனாவை சேர்ந்த Shu Xu என்பவர் அளித்த பதிலில் இந்தியா சீனாவை தோற்கடிக்க முடியும் என்று ஒரு பட்டியல் போட்டு எழுதி இருந் தார்.கோரா இணையதளம் அறிமுகமாகி ஏழு வருஷ ம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
பேஸ்புக்கில் வேலை பார்த்த இரண்டு பசங்கள் தான் இதை ஆரம்பித்தார்கள்.நமக்குள் எழும் கேள்விகளுக்கு பதில் அளிக்க பல பேர் காத்திருக்கு ம் ஒரு' அறிவார்ந்த இணைய தளம். இந்த இணைய தளத்தில் தான் சீனாக்காரர் இந்தியா வோடு எங்கள் நாடு போருக்கு சென்றால் நிச்சயம் தோற்கும் என்கிறார்.அதற்கு அவர் சொல்லும் கார ணங்கள் என்னவென்றால் சீனா இதுவரை பயன்ப டுத்தி கையில் வைத்திருக்கும் அதிகப்படியான ஆயுதங்கள் அனைத்தும் சீனாவிலேயே தயாரிக்கப்ப ட்டது .
ஆனால் இந்தியாவில் அப்படியில்லை, இந்தியா ஆயுத தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் அமெ ரிக்கா, ரஷ்யா இஸ்ரேல் பிரான்ஸ் நாடுகளி டம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து வைத்து ள்ளது தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் அனைத்து ஆயுதங்களும் இந்த நான்கு நாடுகளுடை யது தான். இதனால் சீனாவை விட இந்தியா ஆயுத ங்கள் விசயத்தில் டாப் தான் என்கிறார்.
ஆயுதம் மற்றும் ராணுவ தொழில்நுட்பத்தில் உலக ள வில் முன்னோடியாக இருப்பது அமெரிக்கா மற் றும் ரஷ்யா நாடுகள் தான்.இந்த இரு நாடுகளின் தொழில் நுட்பத்தோடு சீனாவின் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டால் சீனாவின் தொழில்நுட்பம் வெறும் குப்பை.என்கிறார் அந்த சீனாக்காரர்.
அதோடு அமெரிக்கா, ரஷ்யா இரண்டுமே இந்தியா வின் மிக முக்கிய நட்பு நாடுகளாக உள்ளது.எனவே போர் என்று வந்துவிட்டால் இந்தியா அமெரிக்கா ரஷ்யா இரண்டு நாடுகளிடம் இருந்தும் நவீன ஆயுத ங்களை தாறுமாறா க இறக்கும்.அதனால் ஆயுத பல த்தில் சீனாவை விட இந்தியா முன்னணியிலேயே இருக் கும்.என்று கூறியுள்ளார்.
இன்னொரு முக்கியமான விசயத்தை சொல்லியி ருக்கிறார்.. இந்திய ராணுவ வீரர்கள் எவ்விதமான தூண்டுதல் இல்லாமல் தானாக முன்வந்து நாட்டை க் காக்கும் உணர்வு கொண்டவர்கள். ஆனால்சீன ராணுவம் அப்படியில்லை. அரசு கட்டளைக்குப் பய ந்தும், அரசை மகிழ்விக்கும் ஒரு ராணுவமாக இருக் கிறது. இது இந்தியாவிற்கு கூடுதல் வெற்றி வாய்ப் பை அளிக்கிறது.என்று சொல்லியிருக்கிறார்..
உண்மையாகவே சீன ராணுவத்தின் நிஜ வலிமை என்னவென்று பார்த்தால் 1962 ல் நடந்த இந்தியா சீனப் போருக்கு பிறகு 1979 ல் வியட்னாமுடன் ஒரு போரை நடத்தியது .மூன்றாவது இந்தோசீனா போர் என்று சொல்லப்டும் இந்தப் போர் வியட்னாம் கம் போ டியா வை ஆண்ட போல்பாட்டை வேட்டை யாட நடத்தியதற் கு பதிலடியாக சீனா வியட்னாம் மீது தொடுத்த போராகும்.
இன்றைக்கும் இந்தியாவில் மனிதஉரிமைகளை பற் றி மணிக்கணக்கில் மேடையில் பேசுபவர்கள் யாரெ ன்று பார்த்தால் அவர்கள் நிச்சயம் கம்யூனிஸ்ட் கட் சியைசேர்ந்தவர்களாகததான் இருப்பார்கள்.ஆனால்
கம்யூனிசம் ஆண்ட நாடுகளில் மனித உரி மைகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கிற அள விலேயே இருந்தது என்பதற்கு போல்பாட் ஆட்சி ஒரு உதாரணம்.
சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய கொலைகார அதிபர் யாரென்று கேட்டால் ஜெர்மனியின் ஹிட்லர் என்று வரலாற்றை தவறாக திரித்துவிட்டார்கள். ஆனால் சென்ற நூற்றாண்டில் எங்கெல்லாம் கம்யூ னிச ஆட்சி நடந்ததோ அங்கு தான் ஹிட்லரை விட மோச மான கொடுங்கோலர்கள் ஆண்டுள்ளார்கள் என்பதற்கு கம்போடியாவின் போல்பாட் ஒரு எடுத்துக்காட் டு.
1975 முதல் 1979-ம் ஆண்டு வரை நான்கே ஆண்டுக ள் தான் கம்போடியாவின் போல்பாட் ஆட்சி இருந்த து. இந்த நான்கு வருடத்தில் ஏழை, பணக்காரன் வே றுபாடு இல்லாத நாட்டை உருவாக்கப் போகிறேன் என்று போல்பாட் சுமார் 20 லட்சம் மக்களை அது வும் சொந்த நாட்டு மக்களை கொன்றுள்ளதை பார்த் தால் இவரை விட மிகப்பெரிய கொடுங் கோலர் இந்த உலகில் யாரும் இருக்க வாய்ப்பில்லை .
உங்களுக்கு ஆச்சரியமாக' இருக்கலாம் வியட்னாம் ஒரு கம்யூனிச நாடு கம்போடியாவும் கம்யூனிச நாடு தான் பிறகு எதற்கு வியட்னாம் கம்போடியாவை அடி க்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் .இதற்கு விடைதான் இரண்டாம் இந்தோசீனாப்போர்.என்னடா இந்தோசீனாப்போர் என்று கூறிக்கொண்டு வியட்னா மை பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று கேட்கிறீர்களா..
இந்தோசீனா என்பது இந்தியாவுக்கு கிழக்கே சீனாவு க்கு தெற்கே உள்ள நிலப்பகுதியைத்தான் குறிக்கு ம்.குறிப்பா வியட்னாம் கம்போடியா லாவோஸ் நாடு களை குறிக்கு ம் பிரெஞ்சுக்காரர்கள் பிடியில் இருந் து மீள வியட்னாமி யர்கள் மேற் கொண்ட போர் தான் முதல் இந்தோசீனாப்போர்.அடுத்து அமெரிக்காவோ டு வடக்கு வியட்னாம் போரிட்டது இரண்டாம் இந் தோசீனா போராகும்.
அந்த காலத்தில் இருந்த உலக அரசியலை பார்த்தா ல் இப்பொழுதுள்ள தமிழ்நாட்டு அரசியலை விட படு
கேவலமாக இருந்தது.இரண்டாம் இந்தோசீனா போரி ல் அமெரிக்காவை விரட்ட வடக்கு வியட்னாமுக்கு சோவியத்யூனியனும் சீனாவும் வட கொரியாவும் உதவியது என்றால் மூன்றாவ து இந்தோசீனா போரில் சீனாவை எதிர்கொள்ள வியட் னாமுக்கு சோவியத் யூனியனும் வியட்னாமை வீழ்த்தசீனாவுக்கு அமெரிக்காவும் வடகொரியாவும் துணைக்கு நின்றார்கள்.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..என்னடா கம்யூனி ச நாடுகளான சீனாவும் வடகொரியாவும் அமெரிக்கா வோடு இணைந்து இருந்தார்கள் என்பது ஆச்சரியம ல்லவா..சீனாவுக்கும் சோவியத்யூனியனுக்கும் எல்லை பிரச்சனை காரணமாக அப்பொழுது சின்ன சின்ன சண்டைகள் வரும்.இந்த மோதல் தான் சோ வியத் யூனியனுக்கு எதிராக சீனாவை அமெரிக்க பக்கம் தள்ளியது.
இப்பொழுது உங்களுக்கு அப்போதைய உலக அரசிய ல் புரிந்துஇருக்கும் என்று நினைக்கிறேன்.ஓரளவு நியாயமான நாடுகளான சோவியத்யூனியனும் வியட்னாமும் ஒன்றாக நின்று கம்போடியாவின் போல்பாட்டை விரட்டினார்கள் என்றால் பதிலுக்கு வியட்னாமை வீழ்த்த சீனாவும் வடகொரியாவும் அமெரிக்காவும் ஓரணியில் நின்றார்கள் என்பதில் இருந்து ஏகாதிபத்திய நாடுகள் எது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த மூன்றாவது இந்தோசீனா போரில் சோவியத் யூனியன் ஆதரவுடன் வியட்னாம் நாங்கள் தான்
ஜெயித்தோம் என்று சொல்ல இல்லை இல்லை நாங் கள் தான் ஜெயித்தோம் என்று சீனா சொல்ல வரலா று இருவருமே நாங்கள் தான் ஜெயித்தோம் என்று சொல்கிறார்கள்.என்ன சொல்லலாம் என்று நம்மை திருப்பிக்கேட்கிறது.
ஆக இந்தியாவை விட சின்ன நாடான வியட்னாமோ டு சீனா தடுமாறி இருக்கிறது என்பதே வரலாற்று
உண்மை.ஆனால் அதே கால கட்டத்தில் 1971 ல் வி யட்னாமை விட ராணுவ பலத்தில் வலிமையான பாகிஸ்தானை 13 நாட்களில் படுதோல்வியடைய செய்துள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதனால் சீன ராணுவ வீரர்களை விட இந்திய ராணுவ வீரர்கள் வலிமையானவர்கள் என்பது உண்மையேயாகும்.
சரிப்பா..முடிவா என்ன சொல்ல வருகிறாய் என்று கேட் கிறீர்களா..டோக்லாமில் பூடான் எல்லையில் ரோடு போடக்கூடாது என்று சீன ராணுவத்தை தடுத் து நின்றது இந்திய ராணுவம்.இப்பொழுது சீனாவும் பூடான் எல்லையில் நாங்கள் ரோடு போட்ப் போவதி ல்லை என்று பின் வாங்கியதில் இருந்து சீனா இந்தி யாவிடம் தார்மீக ரீதியாக தோற்று விட் டது என்றே சொல்லலாம்.
நன்றி விஜயகுமார் அருணகிரி
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.