நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்

சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே இந்தியாவின் பலம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பீஹார் மாநிலம், கரகாட்டில் ரூ.48,520 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தப் புனித பூமியில், பீஹார் மாநில வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

இன்று கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பீஹார் வந்திருந்த போது பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டு பீஹாருக்கு வந்திருக்கிறேன்.

பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை தூள் தூளாக்குவதன் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது. சில நிமிடங்களில் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை அழித்தோம், இதுவே இந்தியாவின் பலம்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் போதெல்லாம், ஆபரேஷன்சிந்தூர் தொடரும். பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் வலிமையை எதிரிகள் கண்டிருக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் நிறுத்தப்படவில்லை. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால், இந்தியா ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில் பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: பீஹாரில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைவதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசு எந்த வேலையும் செய்யவில்லை. முந்தைய அரசு பெண்களுக்கு ஏதாவது செய்ததா? பெண்களுக்காக நாங்கள் நிறைய வேலை செய்துள்ளோம்.

2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பீஹாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மின் வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். பீஹார் மாநில வளர்ச்சிக்காக பிரதமர் மோடி இவ்வளவு சிறப்பாக பணியாற்றி வருகிறார். மத்திய அரசு சமீபத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்

முன்னதாக, பீஹார் மாநிலம், கரகாட்டில் பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட மக்கள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். மக்களை நோக்கி பிரதமர் மோடி கையசைத்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...