பிரதமர் மோடியோட செல்வாக்கு குறைஞ்சுக்கிட்டே வருதே

' பிரதமர் மோடியோட செல்வாக்கு குறைஞ்சுக்கிட்டே வருது…இப்படியே போனா 2019 தேர்தலில் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் சார் '' என்றார் நண்பர்…

எப்படி சார் சொல்றீங்க ?

வெளியில போய் பத்துப்பேர்கிட்ட கேட்டுபாருங்க சார்…எல்லோரும் ரொம்ப அதிருப்தியில இருக்காங்க… .

ஆக , தமிழகத்தில் மோடிக்கு ஓட்டு விழாதுங்கறீங்க …இல்லையா?….உங்களைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுல மோடிஜியின் செல்வாக்கு உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம்னு எதைச்சொல்வீங்க?.

2014 பாராளுமன்றத்தேர்தல் சமயம்..

அப்ப பாஜக இங்க எத்தனை சீட் ஜெயிச்சுது ?

ஒன்னே ஒன்னு….கன்யாகுமரியில் பொன்னார் மட்டும் ஜெயிச்சார்…

ஆங்…அதே தான் சார்…. தமிழகத்தில் மோடிஜியை ஆகா , ஓகோன்னு நீங்க எல்லாம் சொல்லிக்கிட்டிருந்தப்பக்கூட நீங்க யாரும் பிஜேபிக்கு ஓட்டுப்போடல….. நடக்குறது பாராளுமன்றத்தேர்தல்ங்கிற அறிவுகூட இல்லாம அதிமுகவுக்கு 37 சீட்டை வாரிக்கொடுத்தீங்க….
ஆக…தமிழகத்தின் ஆதரவே இல்லாமத்தான் அவர் பிரதமர் ஆனார்…. இனி வரப்போற தேர்தலிலும் அப்படித்தான் நடக்கும்…. நீங்க எல்லாம் திரும்பத்திரும்ப அதிமுகவுக்கோ இல்ல திமுகவுக்கோதான் ஓட்டுப்போடப்போறீங்க….மத்திய ஆட்சியில் தமிழகத்துக்கு எந்தப்பங்கும் இல்லாமத்தான் இருக்கப்போவுது,,,இதுவரைக்கும் அவருக்கு யார் ஓட்டுப்போட்டாங்களோ , அவங்கதான் அவருக்கு மறுபடியும் ஓட்டுப்போடப்போறாங்க… அவங்ககிட்ட அவர் பேசிக்கிட்டுத்தான் இருக்கார்…அவங்க ஆதரவோட அவர் மறுபடியும் பிரதமராவார்…
நெல்லுக்குப்பாயுற நீர் புல்லுக்கும் பாயுறமாதிரி மத்தியில பாஜக ஆட்சி நடப்பதால தமிழகத்துக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்ந்துகிடைக்கும்…[ ஜன் தன் , அனைவருக்கும் வீடு திட்டம் , முத்ரா வங்கிக்கடன் ஆகியவற்றில் தமிழகம்தான் முதலிடம்…] நமக்கு அதுபோதும்… நீங்க போய் வழக்கம்போல தெர்மகோல் ராஜுவுக்கும் , பெரிய கருப்பனுக்கும் மறக்காம ஓட்டுபோடுங்க… ஆல் தி பெஸ்ட்…. என்றேன்…

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...