வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும்.
நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே விஜயதசமியாக கொண்டாடபடுகிறது.
அரக்கன் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்ற நாளே விஜயத சமியாகும்
விஜய் – என்றால் வெற்றி; தசமி என்றால் – பத்து (தசம் = பத்து). இதனையே விஜய தசமி என கொண்டாடுகிறோம். எனவே 9நாட்களும் விரத மிருந்து வழிபடுவோர், 10ம் நாள் அன்னையின் வெற்றியை கொண்டாடி விரதத்தை முடித்துகொள்வதை வழக்கமாக கொண்டிருகிறார்கள்.
கொல்கட்டா போன்ற வட மாநிலங்களின் முக்கியநகரங்களில் துர்கா பூஜையாகவும் விஜய தசமி அழைக்கபடுகிறது. தேவியின் வெற்றியை கொண்டாடும் விதமாக அன்னையை பிரமாண்டமாக அலங்கரித்து ஊர்வலமாக கொண்டுசெல்லும் வழக்கம் இன்றளவும் இருந்துவருகிறது.
எனவே விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள் என பொருள்படும்.
குழந்தைகளுக்கு விஜய தசமி அன்று ஆரம்பக்கல்வியை ஆரம்பித்து வைப்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மேலும் விஜய தசமி அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றிதரும் என்பது ஐதீகம்.
மேலும் , உலக புகழ் பெற்ற மைசூரு தசராபண்டிகையும் விஜயதசமி அன்று தான் கொண்டாடபடுகிறது. தேவியின் வெற்றியை கொண்டாடும் விழாவாகவே தசராபண்டிகை திகழ்கிறது. மைசூரில் நடைபெறும் தசராபண்டிகை ரத ஊர்வலத்தை காண இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிளிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் கூடுவார்கள்.
Tags; விஜயதசமி, விஜய தசமி, மகிஷாசுரனை தேவி
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.