நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் வேப்பமரத்தை அழைக்கிறோம் . பூலோகத்தை காத்து வரும் மாரியம்மனுக்கு இவ்வேம்பின் இலைகள் மிகவும் விருப்பமானது என்று கருதி வருகிறோம். இம்மரம் சக்தியின் வடிவம் என்றும் அரச மரம் இறை வடிவம் என்றும் கருதி அவற்றை இணைத்து நட்டு வைத்து வணங்கி வருகிறோம்.
வேப்ப மரத்திலிருந்து வீசும் காற்று ஒரு வகை மருத்துவ குணம் கொண்டது.இது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் பாக்டீரியாகளைக் கொல்லும் சக்தியை உடையது.வேப்பமரங்கள் அதிகமாக இருக்கும் கிராமங்களில் மற்ற இடங்களில் நோய்கள் பரவுவது போல் பரவுவது இல்லை.நன்றாக தழைத்து வளர்ந்து இருக்கும் வேப்ப மரத்தை தினந்தோறும் பார்த்து வந்தாலே கண்களுக்கு குளிர்ச்சி உண்டாகும். அம்மரத்தின் அடியில் மாலை நேரங்களில் அமர்ந்து இருந்தாலே மன இறுக்கம் குறையும். உடல் உபாதைகளும் நீங்கும்.இதனால் தான் மன நல காப்பகங்களில் கூட அதிகமாக நாம் வேப்ப மரங்களை காண முடியும். இதனால் மன நலம் பாதிக்கபட்டவர்கள் குணமடைய வாய்ப்பு உண்டு.
இயற்கையாகவே வேப்பமரத்தின் இலைகளின் நுனி பகுதிகள் பூமியை பார்த்த படியே கீழ் நோக்கி இருக்கும்.இதனால் ஒளிச்சேர்கையின் போது
வெளியாகும் ஆக்சிஜனில் வெகு சக்தியுள்ள ஒசான் (O3)கலந்து உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மனித உடலில் உண்டாகும் சகல வியாதிகளையும் குணமாக்கிடும் மருத்துவ குணத்தைக் கொண்ட சஞ்சீவி மரமாக வேம்பு திகழ்கின்றது.
இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை ,மரக்கட்டை , வேப்பங் கொட்டையின் மேல் ஓடு ,உள்ளிருக்கும் பருப்பு,வேப்பமரத்து பால் ,வேப்பம் பிசின்,வேப்பங்காய் , வேப்பம் பழம் ,பூ,இலை ,இலையின் ஈர்க்கு ,வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே சித்த , ஆயுர்வேத முறை வைத்தியங்களில் மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
இதனால் தான் அம்மை கண்டுள்ள வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் அம்மை நோயானது பரவாமல் இருக்கும்.அம்மை நோய்க்கு ஆளானவர்களை வேப்பிலை மீது தான் படுக்க வைத்திருப்பார்கள் .இது அம்மை நோய்
இறங்கும் போது உடம்பில் ஒரு வித நமைச்சலும் அரிப்பும் உண்டாகும் .இதை தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள்.அம்மை நோய் இறங்கிய பின்
தலைக்கு தண்ணீர் விடுவார்கள்.அவ்வாறு தண்ணீர் விடும் சமயத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து
எடுத்த விழுதினை நோயாளியின் உடம்பு முழுவதும் பூசி பின் உடம்பை கழுவுவார்கள்.
சமீப காலமாக அறிவியல் ஆய்வுகளின் வாயிலாக வேப்பிலைக்கு நச்சினை முறிக்கும் தன்மை மற்றும் நுண்ணிய விஷ கிருமிளையும் அழிக்கும் தன்மை உடையது என தெளிவு படுத்துகிறது.
மேலும் குழந்தை பிரசவமான வீட்டின் வாசற்புறத்தில் வேப்பிலைக் தோரணம் கட்டி வைப்பார்கள் .இவ்வாறு வைப்பதினால் வெளியிலிருந்து வருபவ்ரகளிடமிருந்து நச்சுகிருமியானது தாய் சேய் இருவரிடமும் பரவாமல் தடுத்து இருவரையும் பாதுகாக்கும்.
நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை வியாதியையும் இது கட்டுபடுத்தும். எவ்வாறென்றால் வேப்பங் கொழுந்தை மை போல் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியின் கடுமை குறைந்து அதை கட்டுபடுத்தலாம் .மேலும் மஞ்சள் காமலை,குடற்புண்,பாம்புகடி,வீக்கம்,காய்ச்சல் போன்றவைகளையும் இது குணபடுத்த வல்லது.
வேப்பபூ ஆனது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது,இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம் ,வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.
மரங்கள் அனைத்திலும் புனிதமாகவும்,பலவகையான நோய்களை குண படுத்த வல்லதுமாக இந்த வேப்பமரம் கருத படுகிறது. இதனால் நாமும் கோயில்கள்,குளக்கரை பொது இடங்கள் போன்ற பகுதிகளில் நட்டு வைத்து பராமரித்தால் விஞான ரீதியாகவும்,சாஸ்த்திர ரீதியாகவும் பல நன்மைகளை பெற்று வாழலாம்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.